பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேலாயுதன் பழநி மலைக்குச் சென்றவர்கள் அங்கே முருகனுக்கு நடக்கும் அலங்காரங்களைப் பார்த்து மெய்மறந்திருப்பார்கள். ஒவ்வொரு வகையான அலங்காரத்திலும் முருகன் ஒருவகை யான தோற்றமளிக்கிருன். அபிஷேகங்கள் நடக்கின்ற காலத்திலும் அவ்வாறுதான். திருநீறு அபிஷேகம் என்ருல் அப்பொழுது முருகன் வடிவம் ஒருமாதிரி இருக்கும். சந்தன அபிஷேகத்தில் வேருெரு தோற்றம். வெவ்வேறு வேளைகளில் செய்யும்படியான அலங்காரங் களிலும் வெவ்வேறு வகையான தோற்றத்தைப் பக்தர்கள் காண்கிருர்கள். ஒரு வேளையிலே முருகன் குழந்தைபோலக் காட்சியளிக்கிருன். மற்ருெரு வேளையில் சந்நியாசிக் கோலத் தில் அவன் நிற்கிருன். அவன் எல்லா உயிர்களிலும் எல்லா நிலைகளிலும் இருப்பவனல்லவா? இந்த உண்மையை நாம் பழநிமலையிலேயே காண்கிருேம். இதை ஒரு நாடோடிப் பாடலும் கூறுகிறது.