பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேலாயுதன் 67 காலே நல்ல பூசைகட்கு வேலாயுதன் கைக்குழந்தை போலிருப்பார் வேலாயுதன் பட்டப்பகல் பூசைகட்கு வேலாயுதன் பண்டாரம் போலிருப்பார் வேலாயுதன் சாயங்காலப் பூசைகட்கு வேலாயுதன் தண்டபாணி போலிருப்பார் வேலாயுதன் பொழுதோடப் பூசைகட்கு வேலாயுதன் பொன்னுருவம் போலிருப்பார் வேலாயுதன் மலைமேல் குடியிருப்பு வேலாயுதன் மலையாளம் பார்த்திருப்பார் வேலாயுதன் சிலைமேல் குடியிருப்பு வேலாயுதன் தேசமெங்கும் பார்த்திருப்பார் வேலாயுதன். பழநியிலே காவடி எடுப்பவர்களின் கூட்டத்தை எந்த நாளிலும் பார்க்கலாம். மலையாளத்தார்கள் காவடி எடுத்து வரும்போது ஆநந்த பரவசர்களாகி ஆடிக்கொண்டு வரு வார்கள். அவர்களுடைய நாட்டைப் பழநி வேலப்பன் பார்த்துச்கொண்டே பழநிமலையில் நிற்கிருராம். ஒரு நாடோடிப் பாடல் காவடிகளின் பெருமையை வருணிக் கிறது. ஆர்க்காட்டு மூலையிலே-சுப்பையா உனக்கு அஞ்சுலட்சங் காவடியாம் காவடி வருகுதென்று-சுப்பையா நீ கரடேறிப் பார்த்தாயோ? பாலக்காட்டு மூலையிலே-சுப்பையா உனக்குப் பத்து லட்சங் காவடியாம் காவடி வருகுதென்று-சுப்பையா நீ கரடேறிப் பார்த்தாயோ?