உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75ஏலேலோ ஐலசா

யலிலே பெண்கள் அணியணியாகச் சென்று நாற்று நடுகிறார்கள். அவர்கள் பாதங்கள் சேற்றிலே மறைந்திருக்கின்றன. கையிலே நெற் பயிரின் இள நாற்றுகள் கற்றையாக இருக்கின்றன. இடக்கையில் நாற்றுக் கற்றையைப் பிடித்துக்கொண்டு வலக்கையால் ஒன்றிரண்டு நாற்றுக்களைப் பிரித்தெடுத்துப் பண்படுத்திச் சேறாக்கிய வயலிலே நடுகிறார்கள்.

வெய்யில் எரிக்கிறதென்றாலும் நடவு வேலையை விட முடியுமா? அந்தப் பெண்களின் உழைப்பே உலகத்திற்குச் சோறு வழங்க உதவுகிறது. உழுது பயிரிடுவோர் தமது கடமையை என்றும் செய்யவேண்டும். அப்பொழுதுதான் உலகம் பசியறியாமல் வாழும்.

உழைப்பால் ஏற்படும் சலிப்பைப் போக்குவதற்கு நாற்று நடும் பெண்கள் பாடுகிறார்கள். ஏலேலோ ஐலசாப் பாட்டு. எந்தப் பாடலானலும் சரி. அது சலிப்பைப் போக்குகிறதல்லவா? ஒருத்தி முதலில் பாட்டைத்