பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

காற்றில் வந்த கவிதை


தொடங்குகிறாள். அவள் முடிக்கும்போது ஐலசா ஐலசா என்று மற்றவர்கள் கூவுகிறார்கள். வேலையிலே புதிய உற்சாகம் பிறக்கிறது. பாட்டுத் தந்த உற்சாகம் அது:

சாலையிலே-ஏலேலோ
தகரக்கள்ளி-ஐலசா
சாஞ்ச தெல்லாம்-ஏலேலோ
திருகு கள்ளி-ஐலசா
திருகு கள்ளி-ஏலேலோ
பூவெடுக்க-ஐலசா
திருடு ரானே-ஏலேலோ
சின்னப் பையன்-ஐலசா
ஆறு வண்டி-ஏலேலோ
நூறு சக்கரம்-ஐலசா
நம்ம தச்சன்-ஏலேலோ
செய்த வண்டி-ஐலசா
மாட்டு வண்டி-ஏலேலோ
ஓட்டு ரானே-ஐலசா
மாய மாக-ஏலேலோ
ஓட்டு ரானே-ஐலசா
மானத் திலே-ஏலேலோ
சாலை போட்டு-ஐலசா
மாதுளம் பூ-ஏலேலோ
பாவி ருக்கு-ஐலசா
அங்கிருந்து-ஏலேலோ
பேசுரானே-ஐலசா
ஆகாயத்தில்-ஏலேலோ
பேசுரானே-ஐலசா

ஏலேலோ ஐலசாப் பாட்டுக்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றின் இசை எளிமையானதாக இருந்தாலும்