உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

காற்றில் வந்த கவிதை


பூப் பொங்கல்


பொங்கலோ பொங்கல்! தை பிறந்த முதல் நாள் பெரும்பொங்கல். அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மூன்றாம் நாள் பூப் பொங்கல். தை பிறந்தால் இப்படிக் கிராமங்களிலே ஒரே பொங்கல் மயமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்!

மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் ஆண்களெல்லோரும் மாலை கோவிலுக்குப் போய்விடுவார்கள். மாலை கோவில் என்பது லிங்க வடிவாகவுள்ள சிவனுக்கு அமைந்துள்ள கோயில். அண்டை என்று வழங்கும் மூங்கிற் குழாயிலே பால் கொண்டு சென்று அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள்.

ஆண்களெல்லாம் மாலை கோவில் சென்ற பிறகு ஊரிலே சிறுமிகளும் பருவமடைந்த மங்கையரும் பூப் பொங்கல் விழாக் கொண்டாடுவார்கள்.

ஊனான் கொடி என்று ஒருவகையான கொடி மைதானத்திலே நீண்டு வளைந்து வளைந்து கரும்பச்சைப்-