பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூப் பொங்கல் 85 புதராகப் படர்ந்திருக்கும்; வெண்சிவப்பான பூக்கள் கொத்துக் கொத்தாக அதிலே பூத்துக் குலுங்கும். அவற்றை மாட்டுப் பொங்கலன்றே பறித்து வந்து சிறுமிகள் தங்கள் பூக்கூடைகளில் நிரப்பிக் கொள்ளுவார்கள். பூப் பொங்க லன்று அவர்கள் அனைவரும் பூக்கூடைகளுடனும் பலகாரக் கூடைகளுடனும் விநாயகர் கோயிலில் கூடிக் கும்.மியடிப் பார்கள். எத்தனை வகையான வண்ணப் பாட்டுகள் அவர்கள் வாயிலே! பாட்டைத் தொடங்குவாள் ஒருத்தி. அவளே த் தொடர்ந்து அனைவரும் பின்னல் பாடிக்கொண்டு கும்மி யடிப்பார்கள். இதோ ஒரு பாட்டைப் பாருங்கள். ஒரு மிளகு கணபதியே ஒண்ணு லாயிரம் சரவிளக்கு சரவிளக்கு நிறுத்தி வச்சு சாமியென்று கையெடுத்து பொழுது போர கங்கையிலே பொண்டுக ளெல்லாம் நீராடி நீராடி நீர் தெளிச்சு நீல வர்ணப் பட்டுடுத்தி பட்டு டுத்திப் பணிபூண்டு பாலே ரம்மன் தேரோட தேருக்கிட்டே போகலாமா தெய்வமுகங் காண்கலாமா. பாட்டுக்களெல்லாம் பள்ளிக்கூடத்திலே படித்தவை யல்ல. அவை நாடோடிப் பாடல்கள். எந்தக் காலத்தி லிருந்தோ தெரியாது, அவை கிராமங்களிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.