பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடமும் வட இந்திய மொழிகளும்

81

மிகைபடக் கூறப்பட்டதென்றும், அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. ஏனெனிற் கூறுதும்: முதன்மையான சிலவற்றை நோக்க வடமொழி ஹிந்தியாகவும், வங்காளமாகவுந் திரிபுற்றது இயற்கை மாறுதலே என்று நிறுவப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இலத்தீனி லிருந்து எப்படி இத்தாலியமும், ஸ்பானிஷூ-ம் கிளைத் தனவோ, அப்படியேதான் இவையும். ஆனால், வடமொழி இலக்கண அமைப்போடும் பண்புச் சிறப்புக்களோடும், வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பையும் பண்புச் சிறப்புக்களையும் ஒப்பிட்டு நோக்கினால், அவற்றிடையே காணப்படும் வேற்றுமைகள் ஆரியச் சார்பற்ற தாக்குதல்களின் பயனே என்று ஒருவாறு தெளியலாம்.

அதிலும், பல்வேறுபட்ட வட இந்திய மொழிகளு ளெல்லாம் ஒரேபடித்தான இலக்கண வேற்றுமைகள் காணப் படுகின்றமை கொண்டு, இதற்குக் காரணம் பொதுப்பட்ட ஒரு தாக்குதலாகவே இருக்கவேண்டும் என்பது எளிதில் ஊகிக்கப்படும். ”நாகரிக காலத்திற்கு முற்பட்ட பழங் காலச் சுவடுகளாகிய பண்டைய, செம்மைப்படாத முரட்டு மொழிச்சொற்களே” இதற்குக் காரணம் என்று பேராசிரியர் உவில்ஸன் கூறுகிறார். பொதுவாகவே, வட இந்திய மொழிகளுள் இத்தகைய தாக்குதல் பத்தில் ஒருபங்கும், மராத்தி மொழியில் மட்டும் ஐந்தில் ஒருபங்குந்தான் என்று கணக்கிடப்பட் டுள்ளமையால், ஆரியச் சார்பற்ற கலப்பே காரணம் என்பது நன்கு தெளியப்படும்.

வடமொழி பேசிய பார்ப்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற வகுப்பினர்க ளடங்கிய ஆரியர்களது வருகைக்கு முன்னே, வட இந்தியாவின் பெரும் பகுதியில் "தஸ்யூக்கள், நிஷாதர், மிலேச்சர்” என்று அவர்களால் அழைக்கப்பட்டு வந்த பழங்குடி மக்களே வாழ்ந்துவந்திருந்