பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தனர் என்று புத்த நூல்கள் கூறுவதாக மினாயெஃப் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

மேற்கூறிய எபிரேய நூற்களில் கூறப்படும் பிற கீழ் நாட்டு வாணிபச் சரக்குகள் குரங்கு, தந்தம், சந்தனம், அகில் முதலியவையாம். இவற்றுள் குரங்கு என்பதற்கான கோஃப் என்ற சொல் வடமொழி கபி என்பதனேடும், கிரேக்கம் கேபஸ் என்பதனோடும் ஆங்கிலம் ஏப் என்பதனோடுங்கூடத் தொடர்புபடுத்தப்படுகிறது. எனினும், எகிப்திய மொழியிலுள்ள காஃப் இவற்றினும் - பழைமை வாய்ந்ததும் பொருத்தமானதுமான தொடர்பாகும். தந்தத்தினைக் குறிக்கும் ஷென் ஹப்பிம் என்ற தொடரிலுள்ள ஹப் என்பதும் எகிப்தியக்கின் அப் என்பதேயாகயிருக்கக்கூடும். சங்தனம் என்பதன் பெயராகிய அல்கும் என்பது வட மொழியில் அதே பொருளின் பெயராகிய வல்குக' என்பதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இவ் வட சொல்லின் இன்னொரு பொருள் என்பதாம். இம்மூன்று சொற்களுமே ஒன்றுடனொன்று தொடர்புடையவையாக இருக்கக்கூடும். அகிலின் பெயர்கள் அஹலிம், அஹலக் என்பன. இவை வடமொழி அகரு என்பதைவிடத் தமிழ் - மலையாளம் அகில் என்பதனுடனேயே பெரிதும் தொடர்புடையவாம். எனவே, பொதுப்பட நோக்கின், மூன்று மொழிகளும் ஒன்றற்கொன்று தொடர்புடையனவே.

கிரேக்க மொழியில் நெல்லின் பெயராகிய ஒருஸா மிகப்பழமை வாய்ந்த தொன்றாகும். ஐரோப்பாவுக்கு இந்தியாவினின்றும் அரிசி ஏற்றுமதியான பொழுதே இச்சொல்லும் உடன்போயிருக்கவேண்டும். இஃது அரிசி


1. Minayef, 2. Paper by Prof. Weber in the Indian Antiquury, May 1873, 3.Kof. 4.Ape, 5. Shen habbim, 6. Algum, 7.Vulguku, 8,Oruzu.