பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கக. 'ஸூத்திரர்’ என்னுஞ் சொல்லின் பண்டைய வழக்கும், பிற்கால வழக்கும்


இன்று 'ஸூத்திரர் ” என்ற பட்டம் இங்கியாவிலுள்ள பெரும்பான்மையான மக்களையும் குறிக்க வழங்குகிறது.[1] கௌரியர் திராவிடர் என்ற வேற்றுமை இதன் வழக்கில் இன்று இல்லை. முதன்முதலில் இது ஸிந்து ஆற்றின் கரையிலுள்ள ஒரு பழங் குடிமக்களின் பெயர் என்று கருதப்பட்டது. லாஸ்ஸென்[2] என்பார் ஸிந்து ஆற்றின் தென் பகுதியில் உள்ள ஸுத்ரோஸ்[3] என்ற நகரப் பெயர் இப்பெயருடன் தொடர்புடையது என்றும், சிறப்பாக வட அரகோஸியாவிலுள்ள[4] ஸூத்ராய்[5] என்ற மக்களின் பெயரே இதன் முதற் சொல் என்றும் கூறுகிறார். அபீரர்[6], நிஷாதர் முதலியவரைப்போலவே இவர்களும் கறுத்த நீண்ட மயிருடைய பண்டைக் குடியினர் என்றும், ஆரியரல்லாதவரானபோதிலும் ஆரியரால் வென்றடக்கப்பட்டு ஆரிய மயமாக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறுகிறார். பிற பழங்குடிகள் பலரும் ஆரியரால் பின்னர் வென்றடிமைப்படுத்தப்பட்டபோது அவர்களெல்லாரும் இவர்களது பெயராகிய "ஸூத்திரர்" என்ற பெயராலேயே அழைக்கப்பட்டனர். கீழ்ப்படுத்தப்படாது எகிர்த்த பழங்குடிகள் தஸ்யூ என்றோ, மிலேச்சர் என்றோ அழைக்கப்பட்டனர்.

ஆராய்ச்சியாளர் பலர் ஸூத்திரர் என்னப்பட்ட அனைவரும் இங்கனம் அடிமைப்படுத்தப்பட்ட ஆரியால்லாதாரே என்கின்றனர். இது முற்றிலும் பொருத்தமுடையதன்று.


  1. அண்மையில் இச்சொல்லின் ஆட்சி தமிழ்மக்களால் ஆங்காங்கு எதிர்க்கப்பட்டு வருகிறது.
  2. Lassen
  3. Sudros
  4. Northern Arachosia
  5. Sudroi
  6. Abhiras