பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம்

173

றத் தலைவனகிய விஜயன் பாண்டியன்மகளை மணம் புணர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இம் மணவினைபற்றி ஐயம் எழினும் (ஏனெனில் சிங்கள அசுரர்தம் அரசியையும் அவனே மணந்தான் என அது கூறுகிறதாதலின்), பாண்டியநாடொன் றிருந்ததென்பதும், அஃது ஆரியர் முறையையொட்டி முதற்கண் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தமிழரசாதல்வேண்டும் என்பதும், இலங்கையில் மகத ஆரியராட்சி எற்படுவதற்கு முன்னர் இப்பாண்டிய ஆட்சி நடைபெற்று வந்த தென்பதும் எளிதிற் றெளியப்படும். பண்டைய இந்திய வரலாறு எழுதியவர்களுள் சிங்களரே உண்மையிற் றலை சிறந்தவர்கள் என்பது ஈண்டுக் குறிப்பிடற்பாற்று.

”இண்டியன் ஆன்டிக்குவரி” என்ற வெளியீட்டில் 1872 அக்டோபர்த் திங்களில் எழுதிய கட்டுரை யொன்றில், டாக்டர் பர்னல் தென்னாட்டில் பார்ப்பன நாகரிகம் ஏற்பட்ட காலம் மிகப் பிந்தியதெனக் கூறுகிறார். கி. பி. 700-ல் வாழ்ந்த குமாரிலபட்டர் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளைப் பேசுவோர் மிலேச்சர் என்று கூறியதனால் அவர் காலத்திற்குள் பார்ப்பன நாகரிகம் இந்நாடுகளுக்குள் மிகுதியாகப் பரவியிருக்க முடியாதென்பது அவர் கருத்து.[1]

’பார்ப்பனரது உழைப்புக்குத் தென்நாடு பயன்படும் நிலமாய் இருந்த போதிலும் குடியேறிய மக்கள் மிகக் குறைவாகவே யிருந்தனர்’... ‘சில நூற்றாண்டுகள் முன்னதாகவே இலக்கியங்களில் பார்ப்பன இடப்பெயர்கள் சில காணப்படுகின்றன என்பது உண்மையே. ஆயினும், இவை பேராற்றுத்


  1. ”தென் இந்தியாவில் கண்ட பார்ப்பன எழுத்துச் சான்றுகளால் கி. மு. 3-ஆம் நாற்றாண்டிலேயே பார்ப்பன நாகரிகத்தாக்கு ஏற்பட்டதென்பது தெளிவாகின்றது”. ”வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தென்இந்தியா முற்றிலும் திராவிட அறிவும் நாகரிகமுமே நிறைந்திருததன”. என்று ஒருசிலர் கொண்ட கொள்கைக்கு இது மாறுபடுவதாகும். -சென்னை ஆர்க்கியலாஜிகல் ரிப்போர்ட்