உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கால்டுவெல் ஒப்பிலக்கணம்


ஆங்கிலத்தில் வெளியிட்ட ஜே. மூர் என்னும் பேராசிரியர், [1]சமஸ்கிருத மூலங்கள்” என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோளொன்றில், திராவிடம்” என்பது விபாஷை (சிறுபாகதம்) என்று வடமொழிவாணரொருவராற் குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வடமொழிவாணர் திராவிடர்களுடைய மொழி திராவிடி என்று கூறியுள்ளார். எனவே, பண்டைநாட்களில் வடநாட்டாரால் 'திராவிட மொழிகள்' என்று குறிக்கப்பட்டது தமிழையோ, தெலுங்கையோ, அன்றி அவைபோன்ற தனி மொழியையோ அன்று என்பதும், தமிழையுங் தெலுங்கையும் மற்றுந் தென்னிந்திய மொழிகளனைத்தையும் உட்கொண்ட ஒரு மொழியினத்தையே என்பதும், அவையாவற்றையும் ஓரின மொழியாகவே வடவர் கருதியிருந்தார்கள் என்பதும் எளிதில் விளங்கும். திராவிடர்களுடைய மொழியை வடநாட்டார் பைசாச பாகதம் என்ற வகுப்பினுள் அடக்கிவிட்டமை ஈண்டுக் குறிக்கப்பாற்று. இந்தியாவில் அக்காலை வழங்கின. பல உண்ணாட்டு மொழிகளையும் பைசாச பாகதத்தொகுதியிலேயே சேர்த்து விடுவது வடவர் வழக்கம்போலும் ! இன்றேல், பாண்டியன் மடியிற் றவழ்ந்த பண்பார் செந்தமிழும், [2]போத்தர்கள் என்ற திபேத்தியர் மொழியும் பைசாச பாகதத்துள் சேர்க்கப்பட்டிருப்பானேன் பல்லாற்றாலும் வேறுபட்ட பல பண்டைப் பாகத மொழிகளையும் பைசாச பாகதம்’ என்ற ஒரு தொகுப்பிற் சேர்த்ததற்குப் பொதுப்படையான காரணம் ஏதேனும் இருந்திருக்கக் கூடுமென்றால், அது பார்ப்பன மொழி நூலறிஞர் அம்மொழிகளின்பாற் காட்டிய ஒருபடித்தான வெறுப்பேயாகும். ஆதலினாலே யன்றோ அப்பண்டை மொழிகள் பைசாசம் அல்லது பேய்கள்


  1. 1. Muir's Sanskrit Texts
  2. 2. Bhotas