பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பதினைந்து ரூபாயில் ஒருவன் மனைவியைப் பெறலாம், ஆனால் ஒரு கோவேறு கழுதை வாங்க ஐம்பது ரூபாய் வேண்டும். -சீனா

விவாகமாகாத பெண்ணுக்கு ஒரு சிறகில் ஊனம்.

- அரேபியா

ஒருபெண், பிறந்த வீட்டில் குடியிருப்பதைவிட, மரக்டையையாவது மணநது கொள்ளல் நலம். -அரேபியா

நிலம் வாங்குவதற்கு என்றால், வேகமாக ஓடு; விவாகம் செய்து கொள்வதற்கு என்றால், மெதுவாக நட -யூதர்

இளமையில் மணம் செய்து கொள், நீ இளமையாயிருக்கும் போதே பெரிய குழந்தைகளை அடைய முடியும்.

-குர்திஸ்தானம்

உடனிருந்து உண்பதும், குடிப்பதும், உறங்குவதுமே விவாகம் என்று நான் கருதுகிறேன். - ஃபிரான்ஸ்

ஆகக் கழிவான செருப்புக்கும் ஜோடி சேர்ந்துவிடும். -( ,,)

ஓநாயை அடக்கிவைக்க அதற்கு விவாகம் செய்து வை.

- ஃபிரான்ஸ்

[முரடனாயுள்ள மைந்தன், மனைவி வந்தால், அடங்கி விடுவான்.)

இளமைத் திருமணம் நீண்டகால அன்பு, - ஜெர்மனி

அழகுக்காக கலியாணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாயம், பகல் நேரங்களில் துக்கமாயும் இருப்பான். -( ,,)

ஓராண்டு இன்பம் வேண்டுவோர் திருமணம் செய்து கொள்வது நலம்; இரண்டாண்டுகள் இன்பம் வேண்டுமானால், திருமணம் செய்யவேண்டாம். -( ,,)

திருமணம் என்பது காதல் நோய்க்கு வைத்தியசாலை .

-( ,,)

போருக்குப் போகும் போது ஒரு முறை தொழவும், கடலுக்குப் போகும் போது இருமுறை தொழவும், திருமணம் செய்யும் போது மும்முறை தொழவும். -( ,,)