பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

நித்தியமான வாழ்க்கையைத் தவிர வேறில்லை என்றே நான் நினைக்கிறேன் என்பதைச் சத்தியமாய்ச் சொல்லுகிறேன். -விட்மன்

நித்தியமான வாழ்க்கையை விரும்புதல் ஒரு பெரிய தவறுதலை நிரந்தரமாக நிலைக்கும்படி செய்வதாகும்.

-ஷேக்ஸ்பியர்

நீயோ புழுதி, புழுதிக்கே நீ திரும்பவேண்டும். -ப. ஏற்பாடு

இலை வாடுவது போல், நாம் அனைவரும் வாடிவிடுவோம்.

-( , , )

மரணம் கொம்பு ஊதிக் கொண்டு வருவதில்லை. -டென்மார்க்

அதிருஷ்டம் சிலருக்கே உண்டு, மரணம் எல்லோர்க்கும். உண்டு. -( , , )

ஒருவருக்காக மற்றொருவர் உயிர் துறக்க முடியாது.

-ஃபிரான்ஸ்

பாம்பு சாகும் பொழுதே அதன் விடமும் செத்துவிடும்.

-( , , )

மரணம் என்பது புனிதமான உறக்கம். - கிரீஸ்

பகலை இரவில் புகழுங்கள், வாழ்வை முடிவில் புகழுங்கள்.

-( , , )

புகழ் பெற்ற மனிதர்க்கு உலகு அனைத்துமே சமாதி. -( , , )

மரணம் ஆண்டிக்கும் உண்டு, போப்பாண்டவருக்கும் உண்டு. - இதாலி

இறந்தவன் ஒருவனைத் தூக்க நாலு பேர் வேண்டும். -( , , )

ஆறடி நிலம் அனைவரையும் சமானமாக்குகின்றது. -( , , )

மரணம் மருத்துவருக்கு அஞ்சாது. -லத்தீன்

ஓடுகிறவனுக்கு முன்னால் மரணம் ஓடி நிற்கும். -( , , )

மரணம்- வாழ்க்கையின் வாயில். -( , , )

இறந்தவனுக்கு மரியாதை நம் நினைவு, கண்ணீர் அன்று.

-( , , )

மரணத்தின் நினைவோடு வாழ்வாயாக. -( , , )