பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கம்பனே ஆசிரியன், கம்பனை மையமாக வைத்துப் பார்ப்பதே தமிழர் கடமை. வான்மீகத்தின் வழியை அடைப்பதற்காகத்தானே கம்பன் இராமகாதை செய்தான். ‘இராவணன் பிறிதொரு பெண்ணின் உடன்பாடின்றி அவளைத் தீண்டினால் இராவணனின் தலை வெடித்துப்போம்’ என்ற சாபம் வான்மீகி இராமாயணத்தில் இல்லை. கம்ப இராமாயணத்திலேயே இந்தச் செய்தி பேசப் பெறுகிறது. அதனாலேயே கம்பன் சீதையின் திருமேனியைத் தொட்டுத் தூக்காமல் அவளிருந்த நிலத்தொடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனான் என்று கம்பன் கூறுகின்றான். வான்மீகியோ, ‘திருமேனியைத் தீண்டித் தூக்கிக் கொண்டு போனான்’ கைகளைப் பற்றித் தூக்கிக் கொண்டு போனான் என்றே பேசுகின்றான். வான்மீகியிலும் சாபத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால், கற்பழித்தாலேயே தலை வெடிக்கும் என்றிருக்கிறதே தவிர தீண்டினால் தலை வெடிக்கும் என்றில்லை. கம்பனோ இதில் வான்மீகியோடு முற்றிலும் மாறுபட்டு மெய்திண்டினாலேயே தலை வெடிக்கும் என்று மாற்றினான். தன்னுடைய மாற்றத்திற் கேற்ப நிலத்தோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு போனான் என்றே காப்பியம் செய்தான்.

“மண்ணொடும் கொண்டு போனான்
வானுயர் கற்பினாள் தன்
புண்ணிய மேனி தீண்ட
வஞ்சுவா னுலகம் பூத்த
கண்ணகன் கமலத் தண்ணல்
கருத்திலான் தொடுதல் கண்ணின்
எண்ணருங் கூறாய் மாய்தி
என்றதோர் மொழியுண் டென்பான்”

சுந்தர, திருவடி.

என்ற பாடலைப் பெரியாரே எடுத்துக் காட்டுகிறார். அவரெடுத்துக் காட்டும் மேற்கோள் பாடல் அவர் கூற்றுக்கே