பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கையில் நல்லன வந்தமைதலும் உண்டு! தீயன வந்து தொல்லை தருதலும் உண்டு. நெறியழிந்தோர், தீமைக்கு மற்றவர்களையே காரணம் காட்டி, தம் தவறுகளை மூடிமறைத்துக் கொள்வர். யாரொருவருக்கும் ஒரு நன்மையை அல்லது தீமையை பிறிதொருவர் செய்துவிட முடியாது. எரிகின்ற இயல்புடைய பொருள் ஒன்றைத்தான் ஒருவர் எரிக்கமுடியும்.

அதுபோல நன்மையை ஏற்று ஒழுகும் இயல்புடையோரே நன்மைக்குரியதாக அமையும் சூழல்களை ஆற்றலோடு பயன்படுத்தி நன்மையைக் காண்பர்; படைப்பர்.

நொய்ம்மையுடையோர். நல்ல சூழல்களையும் கூட வலிந்து தீமையாக்கிக் கொள்வர். ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்து விடுவதும் இல்லை. தீமை செய்து விடுவது மில்லை இஃதொரு சித்தாந்தம்.

ஆதலால், நன்மையைக் கண்டபொழுது மகிழ்தலும் அவசியமில்லாத ஒன்று. தீமையைக் கண்டபொழுது துவள்தலும் தகாத ஒன்று. மகிழ்தலும் நோதலும் வாழ்க்கைக்கு நல்லன செய்யா!

சாதல், புதுவதன்று! பிறப்பிலேயே சாவும் நிர்ணயிக்கப் பெற்றிருக்கிறது. இஃதொரு மாற்றமுடியாத நியதி. ஆதலால், இது மகிழ்ந்து வாழ்தலையும் ஒரு பொருட்டாக நினைக்கக் கூடாது. அதுபோலவே, வெறுப்பன வந்தபோதும் நொந்து கவலைப்படுதல் கூடாது.

ஆற்றுவெள்ளப் போக்கில் பட்குகள் மிதந்து - செல்லுகின்றன. அதுபோலச் சமுதாய முறை நிகழ்வுகளில் உயிரின் வாழ்க்கையும் மிதந்து செல்கிறது. ஒருவர் பெருமைக்கும் சிறுமைக்கும் அவர் காலத்தில் சமுதாய நிகழ்வுகளே காரணமாக அமைகின்றன.

அதனால், ஒருவரைப் பெரியோர் என்று அளவுக்கு விஞ்சிப் புகழ்தல் நெறியுமன்று; முறையுமன்று. அது போலவே