பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 வாயெடுத்தான். அதற்குள்ளே கண்ணகி தொடங்கிவிட்டா "எனக்குத்தான் யாருமே நீந்தக் கற்றுக் கொடுப்பதில்ை போன கோடை விடுமுறையிலிருந்து கேட்டுக் கேட்டு அலுத் விட்டது.” "அம்மாவிடம் முதலிலே நீ அனுமதி வாங்கு : பிறி நான் கற்றுக் கொடுக்கிறேன்” என்றான் தங்கமணி. கண்ணகி, உனக்குத்தான் தண்ணீரைக் கண்டாே சளிப் பிடிக்குமே ! அத்தை நிச்சயம் அனுமதி கொடு மாட்டார்கள். முதலில் நீ நீந்தப் பழகிக்கொள் : அப்புற் தண்ணீரில் இறங்கலாம்” என்று நகைத்தான் சுந்தரம். "இந்த விடுமுறையிலே எங்காவது ஆற்றுப்பக் போனால் நன்றாக இருக்கும். ஆற்று மணலிலே 醬 வதும், ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவதும் ஒே குதுகலமாக இருக்கும்' என்று தங்கமணி தனது விருப்பத்தை தெரிவித்தான். மற்ற இருவரும் உற்சாகமாக அதை ஆமோதித்தார்க "எனக்குக்கூட ஒவ்வொரு விடுமுறையிலும் சென்னைக்ே வந்து அலுத்துப்போய்விட்டது. மதுரையை விட்டா சென்னை ; சென்னையை விட்டால் மதுரை. எங்காவது ஆற்றுப் பக்கத்திலே ஒரு கிராமத்திற்குப் போய்க் கொஞ் நாள் தங்கி வந்தால் நன்றாக இருக்கும். உன்னுடை ஜின்காவிற்கும் மரங்களில் ஏறி விளையாடுவதற்கு ஒரு நல்: சமயம் கிடைக்கும்.” ஆமாம், அண்ணா அதுதான் எனக்கும் ஆசையா இருக்கிறது. ஆனால், அப்பா என்ன சொல்லுவாரோ? என்றாள் கண்ணகி. கண்ணகி, கிராமத்துப் புளியந்தோப்பிலே இரட்டைவா பேயிருக்கும், தெரியுமா ?’-இப்படிச் சுந்தரம் பேயை பற்றிப் பேசத் தொடங்கினான். பேயா 1 ஐயோ. நான் வரமாட்டேன்." -இல்லை கண்ணகி, இவன்தான் இரட்டைவால் பேய் வேறே பேயெல்லாம் கிடையாது. அதெல்லாம் கட்டுக்கதை பயப்படாதே' என்று தங்கமணி தன் தங்கைக்குத் தைரிய கூறினான்.