பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


●

aaoBe喀 செல்லையா 總 73

முபாட்டியிடும் வலிமை பெறும் நிலைக்கு வளர்ந்து

அத்தகைய அரிய சூழ்நிலையை உருவாக்கித் தரும் பொறுப்பு, தேர்வுக் குழுவினருக்கு இருக்கிறது. ஒரு குழுவிற்குத் தாயாக இருந்து வளர்க்க வேண்டிய தேர்வுக் குழுவினர், தடம் மாறித் தரம் மாறிப் போனால், தாயே குழந்தைக்கு விஷம் கொடுத்தால் தடுப்பார் யாரோ என்ற பாட்டைத்தான் பாட வேண்டியிருக்கிறது.

நீதிபதியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர்கள், குற்றவாளிக் கூண்டிலே ஏன் கூனிக் குறுகிப் போய் நிற்க வேண்டும்?

மேலே கூறிய குறைபாடுகளைத் தேர்வாளர்கள் தவிர்க்க வேண்டும். விளையாட்டின் மகிமையையும் மாபெரும் சக்தியையும் அவர்களுடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஒடுகின்ற நிலையில் அவர்களது நினைவில் கலந்திருக்கச் செய்ய வேண்டும்.

'நீதியையும் நியாய உணர்வையும் வளர்க்கிறது

விளையாட்டு; சமவாய்ப்பையும் சமதர்மத்தையும் கொடுக்கிறது

விளையாட்டு; உண்மையை, உழைப்பினை உற்சாகமாக வரவேற்கிறது

- விளையாட்டு; *-யர்ந்த ஆற்றல் உள்ளவர்களை உலகறியச் செய்கிறது

விளையாட்டு; ‘ந்தநிலையிலும் கடமையாளர்களை கெளரவிக்கிறது விளையாட்டு: "ழிவுக்கு ஆதாரமாக அமைந்து அளவளாவுகிறது

விளையாட்டு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/75&oldid=557528" இருந்து மீள்விக்கப்பட்டது