பக்கம்:சங்க கால மகளிர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


நெய்தல் நில மகளிர் அவலன் (வண்டு) ஆட்டுதலோடு, உரலில் உலக்கையிட்டு அவல் இடித்தலும், வள்ளைப் பூக்கொய்து மாலை தொடுத்தலும் செய்தனர் என்பதனைக் குறுந்தொகை, பதிற்றுப்பத்துப் பாடல்களால் அறியலாம்:

பாசவ லிடித்த கருங்கா முலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி

ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்.[1]

அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி

வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்.[2]

இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு, மணல் மேடுகளில் நின்று விளையாடினர் என்று புறநானூறு குறிப்பிடுகின்றது:

செறியறிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்

பொலஞ்செய் கழங்கின் தெற்றி ஆடும்.[3]

சிறுமனை முற்றத்தில் சிறுமகளிர் கழங்காடுகின்றனர்;

கூரை கல்மனைக் குறுங்தொடி மகளிர்

மணலாடு கழங்கு.[4]

மகளிர் அழகான அருவிகளில் குதித்துக் குடைந்து குடைந்து புனலாடுகிறார்கள்.

காமர் கடும்புனல் கலந்தெம்மோடு ஆடுவாள்

தாமரைக் கண்புதைத்து அஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலான்.[5]

  1. குறுந்தொகை: 238: 1-3
  2. பதிற்றுப்பத்து: 29: 1-2,
  3. புறநானூறு: 3 6: 3-4.
  4. நற்றிணை: 79: 2-3
  5. குறிஞ்சிக்கலி: 3:1-2