பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திற்குக் கொண்டுவர வேண்டும். சிறிதுநேரஞ்செய்தாலும் செவ்வையாகச் செய்தல் வேண்டும். அதைவிட்டு வாரத்திற்கு இரண்டு முறை ஒருமணிநேரம்வரையில் செய்வதும் அல்லது வாரத்தினிறுதியில் நெடுநேரம்வரைக்கும் செய்வதுமாயிருந்தால் அதனால் சிறிதும் பலன் ஏற்படாது, என்று ஜே. பி. மில்லர். கே. டி. என்ப வர் "மைஸிஸ்டம் என்ற தன்னுடைய நூலில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சிறிதும் மாறுபாடின்றி நாங்கள் கூறியுள்ளபடி சூரிய நமஸ்காரங்களைச் செய்பவர் அடையும் பலன்கள் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லமுடியாது. அத்தியாயம் 4. சூரியநமஸ்காரங்களைச் செய்யும் விதம். தேக ஆரோக்கியத்திற்கும், காரிய சாதனைகளுக்கும், தீர்க்காயுளுக்கும் சூரியனைக்குறித்து நமஸ்காரங்கள் செய்தற்குச் சூரியநமஸ்காரங்கள் என்று பெயர். பிரதியொரு நமஸ்காரத்திலேயும் சரீரத்திலுள்ள அடியில் கண்ட எட்டுதேக உறுப்புக்களை உபயோகித்தல் வேண்டும்:- (1) தலை, (2) இருதயம், (3) கால்களும் பாதங்களும், (4) தோள்களும் கைகளும், (5) முன் கால் or முழங்கால் (Knees) (6) பார்வை, (7) வார்த்தைக்குரிய இந்திரியங்கள் (8) மனதும் சித்தமும். இதைத்தான் சாஷ்டாங்கநமஸ்காரங்கள் என்று கூறுவார்கள். இந்நூலாசிரியரான ஒளந்து சமஸ்தானாதிபதியின் தந்தையான சீனிவாசராவ் பந்து பிரதிநிதியவர்கள் தாம் 55 வருஷங்களாகச் சூரிய நமஸ்காரங்களைச் செய்துவந்த கிரமத்தை அடியிற்குறிக்கப் பட்டிருக்கிறது. எல்லாரும் அதன்வழிநடத்தல் மிகவும் நல்ல தென்று நாங்கள் நினைக்கிறோம். நமஸ்காரங்களைச் செய்வதற்காக 7 அடி நீளமும் 21 அடி அகல முமுள்ள இடம் இருந்தால் போதும். நிலமட்டமானது சிறிதும் வித்தியாசமில்லாமல் சமமாகவும் வழுக்குதலில்லாமலுமாயுள்ள முரட்டுச் செங்கல் கற்களினாலாயினும் அல்லது இதர கற்களினாலாயினும் தரை சமன்செய்திருத்தல் வேண்டும். அதிகமான துணிகளை இவ்வப்பியாசஞ்செய்யும்பொழுது உடுத்திக்கொள்ளக்கூடாது. சிறிது துணி உடுத்திக்கொண்டால் போதும். அது மிகவும் அனுகூல மானது.