பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சூரியோதயத்திற்கு முன் வயிற்றுக்கு ஒரு ஆகாரமும் எடுத்துக் கொள்ளாமல் சூரிய நமஸ்காரங்களைச் செய்தல் சிரேஷ்டம். காலை 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு குளித்து மடி வேஷ்டியைக் கட்டிக்கொண்டு நமஸ்காரங்களைத் தொடங்கவேண்டும். சூரியன் உதயமாவதற்கு ஐந்து நிமிஷங்களுக்கு முன்னரே முடித்து விடுவது நல்லது. அப்பொழுது சூரியனுடைய நீலகிரணங்களை இழுத்துக்கொள்ளுவதற்குச் சரீரமானது சக்தியுள்ள தாயிருக்கும். (சந்தியாவந்தனம், பிராணாயாமம் முதலியவற்றைச் செய்பவர்கள் சூரிய நமஸ்காரங்களைச் செய்து முடித்தபிறகு இவற்றைச் செய்யலாம்.) எந்த தேகாப்பியாசததைச் செய்தபோதிலும் நம்முடய சக்திக்கு மீறிச் செய்யக்கூடாது. தேகாப்பியாசம் செய்த 5 அல்லது 10 நிமிஷங்கள் வரையில் சிரம பரிகாரஞ்செய்து கொண்டு, நம்முடைய நித்திய காரியங்களை ஆயாசமும் சிரமுமில்லாமல் உல்லாசமாய் செய்து கொள்ளத்தக்கவர்களா யிருக்கவேண்டும். சூரிய நமஸ்காரங்களையுங்கூட நம்முடைய சக்திக் கேற்பச்செய்ய வேண்டும். முதல் நிலை (ஆசனம்):- சுமார் 22 அங்குலம் சதுரமான கம்பளி, பட்டு, அல்லது நூல் துணியை நிலத்தின் மேல் விரித்துவைக்க வேண்டும். கால்களைச் சேர்த்துக்கொண்டு விரல்கள் துணியின் நுனியை த்தொட்டுக் கொண்டிருக்குமாறு கிழக்குமுகமாகநின்று கொள்ள வேண்டும். கைகளை மார்பின் முன் சேர்த்து உள்ளங்கைகள் ஒன் றோடொன்று பொருந்துமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மார்பை முன்னுக்குக் கொண்டுவந்து வயிற்றை பின்னுக்கிழுத்துக் கொண்டு மிக்க சுவாசத்தை உள்ளுக்கு இழுத்துக்கொள்ள வேண்டும். புயங்களைக் கெட்டியாக நிறுத்திக்கொள்ளவேண்டும். ஏதாவதொரு கடவுளின் படத்தைக்கண்ணுக்கு முன்பாக வைத்துக்கொண்டு அதனைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். தலையையும் கழுத்தையும் இப்புறம் அப்புறம் திருப்பாமல் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

	மந்திரத்தை உச்சரியுங்கள். உதடுகளை மூடிக்கொண்டு நாசியின் மூலமாய் சுவாசத்தை அழுத்தமாய் உள்ளுக்கிழுங்கள். இம்மாதிரியே பாக்கியுள்ள ஒன்பது நிலைகளிலேயும் நாசியின் மூலமாய் சுவாசத்தை விடுங்கள். காற்றை அடக்கிக் கொள்ளுங்கள். (முதல் படத்தைப்பார்க்க.) 

நீங்கள் தொழும் கடவுளுடைய படத்தையாவது அல்லது சூரியனுடைய படத்தையாவது உங்களுக் கெதிரில் வைத்துக்கொள்ளுங்கள். படங்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் ஒருதடிப்பான காகி