பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தத்தில் பளபளப்பான வர்ணத்தினால் வட்டமாகவும் அல்லது நட் சத்திரத்தைப்போன்ற ஒரு அடையாளத்தைச்செய்து அதனையாவது உங்கள் எதிரில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச்செய்தால் நமது கவனமும் பார்வையும் ஒரே வழியிற்செல்லும். மனமும் சஞ்சல மின்றி ஒரே நிலையில் நிற்கும். இரண்டாம் நிலை:- இந்நிலையில் சுவாஸத்தை யடக்கிக்கொண்டு சிறிது முன்னுக்கு வளைந்து உங்கள் முன் விரித்திருக்கும் துணியின் மூலைகளின் மேல் பதியும் படி விரல்களோடு உள்ளங்கைகளைக் கால் கட்டைவிரல்களுக்குச் சரியாக வைக்க வேண்டும். அப்பொழுது முழங்கால்கள் வளையக்கூடாது. மூக்கானது முழங்கால்களைத் தொடுவது போல் இருக்கவேண்டும். பிறகு சுவாஸத்தை முழுவதும் வெளியே விடவேண்டும். (இரண்டாம் படத்தைப் பார்க்க) குறிப்பு (1):- உள்ளங்கைகளைத் துணியின் பக்கங்களுக்கு எதிராகவாவது அல்லது சுமார் 22 (Degrees) உட்கோணமாகும் படிச் சமதூரமாகவாவது வைத்துக்கொள்ள வேண்டும். 45 (Degrees) வைத்துக்கொண்டால் உத்தமமென்று சிலர் கருதுகிறார்கள். குறிப்பு (2):- ஆரம்பத்தில் முழங்கால்களை வளைக்காமல் உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றும்படிச் செய்வது மிகவும் கஷ்டம் என்று பலர்கருதலாம். முதலில், அவர்கள் கைவிரல்களின் நுனியால் கால் பெருவிரல்களைத் தொடும்படிச் செய்தால்போதும். விடா முயற்சியினால் நாங்கள் கூறியபடிச் செய்யலாம். அப்படிச் செய்ய முடிந்தால் முதலில் உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றிப் பிறகு முழங்கால்களை நீட்டவேண்டும். சிறிதும் வித்தியாசமில்லாமல் இந்நிலையைக் கற்றுக்கொண்டாலொழிய இந் நமஸ்காரங்களால் பயன் ஏற்படாது. மூன்றாம் நிலை:- முதலில் சுவாஸத்தை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். முழங்கையிடம் புயத்தை வளைக்காமல் புயங்கள் நிமிர்ந்திருக்குமாறு ஒருபாதத்தைப் பின்புறம் தூரமாக எடுத்துவைக்க வேண்டும். பிறகு நிலத்தை, நீட்டப்பட்டக் காலினுடைய முழங்காலினாலும் பெருவிரல்களினாலும் நிமிர்ந்திருக்கும் புயங்களுக்குச் சரியாகத் தொடவேண்டும். இம்மாதிரியே வலப்பாதத்தை முதலும், பிறகு இடப்பாதத்தையும் மாற்றி மாற்றி எடுத்து வைக்க வேண்டும். (மூன்றாம் படத்தைப் பார்க்க) நான்காம் நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு, கால்பெருவிரல்கள் கணுக்கால்கள், முழங்கால்கள் இவை ஒன்றையொன்று தொடும்படி இன்னொரு காலை எடுத்துவைக்க வேண்டும். புயங்களை நேராக