பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

கும் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. என் தலையானது சுழல ஆரம்பித்தது. ஆனால் அது கிரமமாக எனக்கு வழக்கத்திற்கு வந்தது. ஒரு விஷயத்தை மாத்திரம் விடாமல் முயன்று கொண்டிருந்தேன். எந்த ஸ்வரத்தை உச்சரித்துக் கொண் டிருந்தேனோ, அதற்குப் பொருத்தமாகவுள்ள எனக்குத்தோன்றின மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பிரயத்னப்பட்டுக்கொண்டிருந்தேன். உதாரணமாக ஈ' ஸ்வரமானது சந்தோஷத்தையும், உல்லாசத்தையும் தோற்றுவிக்கும் போலிருந்தது. தவிரவும் 'ஓ' ஸ்வரமானது சிறிது கம்பீரபாவத்தை (அதாவது விசனம் அல்லது சிந் தையற்ற)த் தோற்றுவிக்கும் போலிருந்தது. இப்படிச்சிலவாரங்கள் கழிந்தபிறகு வியாதியான து குணப்பட்டு வந்தது. இதற்கு இந்த புது அப்பியாசமானது காரணமாயிருக்குமோ என்னமோவென்று எனக்குத் தோன்றிற்று. ஆனால் சாதாரணமாக என்னுடைய வியாதியானது குணமடைந்தது என்ற விஷயத்தில் சந்தேகமே இருக்க வில்லை. அது எப்பொழுதும் உண்மையான பலனையே கொடுத்துக் கொண்டிருந்தது. என் சரீரத்தில் ஏதோ ஒரு காரியமானது நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குக் கண்டிப்பாய்த் தோன்றிற்று. இந்திரியங்களெல்லாம் தத்தம் காரியங்களைச் செய்யத் தொடங்கின. அன்றியும் நான் உச்சரித்துக் கொண்டிருந்த சில ஸ்வரங்களின் பலன்கள் என்னுடைய அவயவங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ஸ்வரத்தின் உச்சாரணையினால் தொண்டையி னின்றும் சுவாஸ கோசங்களினின்றும் அதிகமாய்க் கபம் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த பாகங்கள் சுத்தமான பிறகு கபம் வெளிவருவது நின்று விட்டது. “இப்படி எதற்காகத் தொண்டையும் ஸ்வாஸ கோசங்களும் ஆரோக்கிய நிலைக்கு வந்தன? சுவாஸத்தைக் கிரமப்படுத்தி ஸ்வரங்களை யுச்சரிப்பதுடன் கூட சரியான மனோ பாவத்துடன் இருப்பதால் ஒருவேளை இரத்தமானது தேகத்தில் சரியாகச் சென்று இம்மாதிரிச் செய்திருக்குமோ? ஒருவேளை ஒவ்வொரு ஸ்வரமும் சரீரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்குமோ ? நான் உச்சரித்துக் கொண்டிருக்கும் விதவிதமான ஸ்வரங்களால் வியாதியால் வருந்திய என்னுடைய சரீரம் குணப்பட்டிருக்குமோ? அப்படி யிருக்குமானால் இரத்த ஓட்டத்தைக் கிரமப்படுத்தி என் விருப்பப்படி நாம் புப்பிரதேசங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவல்ல உபாயம் அகஸ் மாத்தாகி என்வயப்பட்டதோர் முடிவாக எந்த பாகத்திற்கு இரத்தம் அதிகமாக வேண்டுமோ, அங்கே அதை யனுப்பி வியாதியைப் போக்