பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கிறீர்களா? இந்தியா தேசத்தில் மந்திரங்களென்று சொல்லப்படுவ நானா ஸ்வர உச்சாரணைகளுடைய அர்த்தம், பாவம் முதலியவற்றைக் கண்டு பிடித்துள்ளவன் மிக்க தீரனாகிருக்க வேண்டும்.

இந்தப்புராதன சித்தாந்தங்களை அனுபவத்திற்குக்கொண்டு வர இஷ்டமிருந்தால், அடியில் கூறப்பட்டுள்ளவற்றை அனுசரிக்க வேண்டும்.

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஸ்வரங்கள்.

முதலில் ஒரு ஸ்வாத்தை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அதற்குத் தக்க மனோபாவத்தை எற்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அதைச் சொல்லுங்கள். அவ்விதம் மனதில் நினைத்துக்கொண்ட சுவாஸக்கிரமத்திற்கு உள்பட்ட ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு காரிய ஸ்தானம் இருக்கின்றது.

”ஈ ஸ்வரத்தினால் மேல்வாய், தொண்டை, தலை இவை களுக்கு அதிர்ச்சி ஏற்படுகின்றது.

"ஏ ஈஸ்வரத்தினால் ஆகாரக் குழாய், தொண்டை, குரல்வளை (Larynx) இவைகளுக்கு அதிர்ச்சி ஏற்படுகின்றது. ஸ்வ ரத்தினால் சுவாஸ கோசங்களுக்கும் இருதயத்தின் மேல் பாகங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுகின்றது. ஸ்வரத்தினால் சுவாஸ கோசங்களுக்கும் இருதயத்தின் அடிப்பாகத்திற்கும் அதிர்ச்சியுண் டாகும்.

ஸ்வரத்தினால் ஈரல், இரைப்பை, குடல்கள் இவைகளுக்கு அதிர்ச்சி யுண்டாகும்.

மொத்தமாக நான் 32 ஸ்வரங்களை ஏற்படுத்தி யிருக்கிறேன். அவற்றை அவரவர்கள் தன்மைக்கேற்றவாறு உபயோகிக்க வேண்டும். அவைகளை உபயோகிப்பது மிக எளிதே; அவைகளை நான்கு நிலைமைகளாகப் பிரித்திருக்கிறேன். முதலாவது: உங்கள் மனதைத் தேவ காரியங்களைச் செய்வதில் எப்படிச் செலுத்துவீர்களோ அப்படியே பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அதாவது அந்தந்த ஸ்வாங்களுக்கு அனுகூலமான பாவத்தை நினைத்துக்கொண்டு மனதை ஸ்திரமாக அந்த பாவத்திலேயே வைத்துக் கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியமானது. உங்களுடைய மனது இந்த ஸ்திதியில் இல்லாவிட்டால் ஸ்வர உச்சாரணையால் உங்களுக்கு ஏற்படத்தக்க பிரயோஜனம் மிகவும் குறைந்து போகும். உதாரணமாக 'ஈ ஸ்வரத்தையுச் சரிக்குங்கால் உதடுகளால் புன் சிரிப்பைத் தோற்றுவித்து, கண்களைச் சிறியதாகச் செய்து உங்கள் மனமும் முகமும் சந்தோ-