பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஷத்தைத் தோற்றுவிக்குமாறு இருக்க வேண்டும். இதில் சிறிதும் தயங்கக்கூடாது. இதை உண்மையாகக் செய்ய வேண்டும். "ஈ ஸ்வரத்தையுச் சரிக்குங்கால் "ஓ அல்லது வேறு ஸ்வரங்களுடன் பொருந்தும் மனோவிருத்தியைச் சேர்த்தால் உங்களுடைய சரீரத்திற்காகிலும், மனதிற்காகிலும் இந்த சாதனத்தால் நேரவல்ல பிரயோஜனங்கள் மிகவும் குறைந்து போகும். இரண்டாவது: ஒரு சிரேஷ் மானகாரியத்தை நிறைவேற்றத்தக்க கம்பிரபாவத்தை யடைந்து வாயை மூடிக்கொண்டு மூக்கினால் சுவஸாத்தை உள்ளுக்கு நன்றாக முழுமையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்விதமாக ஸ்வரத்தை அப்பியாசஞ் செய்யுங்கள். மூன்றாவது: உங்கள் சக்திக்கேற்ப ஒன்று, இரண்டு, மூன்று, அல்லது நான்கு நிமிஷங்கள் வரைக்கும் சுவாஸத்தைப் பிடியுங்கள். வரவர காலத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சுவாஸத்தை யடக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்வரத்தின் மேல் உங்களுடைய மனதைச் செலுத்தவேண்டும். இதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அது என்ன வென்பது இவ்வழியில் உங்களுக்குச் சிறிது அனுபவம் ஏற்பட்டபிறகு வெளிப்படும். நீங்கள் உச்சரிக்கத்தக்கஸ்வரத்தினால் வசப்படாத சில இந்திரியங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இரத்த வோட்டத்திலும் சிறிது மாறுதல் உண்டாகும். இது உங்களுக்கு அஸாத்தியம் என்று தோன்றினால் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். உண்மையாக எது எப்படி ஏற்படுகின்றதோ அதைக் கூறி யிருக்கிறேன். நவீன சாஸ்திர முறையில் சாதாரணமான சூட்சுமமான எந்திரங்களின் மூலமாய் இவ்விஷயத்தைப் பரீட்சை செய்திருக்கிறார்கள். தவிரவும், மிக்க கீர்த்திபெற்ற வியன்னா (Vienna) நகரத்து சாஸ்திரஞ்ஞரான பிரொபசர் ஹாஜெக் (Prof. Hajek of Vienna) என்பவர் “எக்ஸ் ரே (X-ray) பிரயோகத்தினால் இதன் உண்மையான விஷயத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். இந்திரியங்களைத் தீண்டுவது (Internal Massage) இரத்தவோட்டத்தில் மாறுதல் உண்டாவதனாலும் சரீரத்தின் சில பாகங்களுக்கு இரத்தம் அதிகமாகச்செல்வதனாலும் அப்பாகங்கள் (நீவி) தடவிக்கொடுத்த மாதிரியாகின்றன. இதனால் அவ்வப் பாகங்களின் அழுக்கானது இரத்தத்திலிருந்து வெளித்தள்ளப்படுதலன்றி அவைகளுக்கு வேண்டிய அளவு போஷணைத் திரவியங்களையும் சரீரம் வளர்வதற்குரிய சாமான்களையும் உண்டாக்கிச் சரீரத்தைச் சுத்தப்படுத்துகின்றது. இதனால் சரீரம் புஷ்டியடைகின்றது.