பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நான்காவது: ஏதாவதோரு ஸ்வரத்தை மனதில் நினைத்துக் கொண்டு, அந்த ஸ்வரத்திற்குப் பொருந்தும்படியான மனோ விருத்தியினால் அதன் மேல் மனதை வைத்து, அதை உச்சரித்துக்கொண்டே சுவாஸத்தைக் கிரமமாகவும், பூர்த்தியாகவும் உள்ளிழுத்துக் கொண்டு, கூடுமான மட்டும் (1,2,3, அல்லது 4 நிமிஷங்கள் நேரம்) சுவாஸத்தை அடக்கிக்கொண்டு மனோபாவத்தைவிடாது உச்சரித்துக்கொண்டே உச்சுவாசஞ் செய்யவேண்டும். உதாரணமாக, "பி, ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ என்ற ஸ்வரத்துடன் உங்களுடைய சுவாஸ கோசங்களில் இருக்கும் சுவாஸத்தை (காற்று) சிறிதும் ஆயாச மின்றி சாத்தியமான பரியந்தம் வெளிப்படுத்தி சுவாசகோசங்களைக் காலி செய்ய வேண்டும். அப்பொழுது மேல் கூறியுள்ள சுவாச உச்சுவாசங்கள் முதலியவற்றைச் செய்யவேண்டும். இதை விடாமல் தினமும் சாப்பிடுவதற்கு முன்பு செய்ய வேண்டும். அதைப்போலவே 'பி ஓ ஓ ஓ ஓ, ஹொ ஓ ஓ ஓ ஓ முதலியவற்றைப் பிரயத்தனஞ் செய்யவேண்டும். "ஹ" என்பது அதிக ஆயாசத்தைக் கொடுக்கின்றது. இது மிகவும் இன்றியமையாதது. "பி, ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ " மாதிரியான ஸ்வரத்தை உதடுகளைக் கூராக மடித்துக்கொண்டு ஊதுகிறமாதிரி உச்சரிக்க வேண்டும். கம்பீரபாவமே இதற்குப் பொருத்தமாயுள்ள மனோவிருத்தியாகும். இதனால் விசனமாவது, சோர்வாவது ஏற்படுகிறதில்லை. இவ்வழியைச் சிறிதும் வித்தியாசமின்றி நான் கூறியுள்ள முறைப்படிச் செய்வது மிகவும் அவசியமென்பதைப்பல முறைவற்புறுத்திச் சொன்னாலும் போதாது. சரியாகச் செய்தலும், சரியின் றிச்செய்தலும் எளிதாகவே தோன்றும். ஆனால் தப்பாகச் செய்தால் யாதொரு பிரயோஜனமும் ஏற்படாது. இப்புத்தகத்தில் எல்லாஸ்வரங்களையும் அவைகளின் பிரயோசனங்களையும் விவரமாகக்கூற இடம் போதாது. சில முக்கியமானவற்றை மாத்திரம் அடியில் கூறுகிறோம். அவையே போதுமா னவை: "ஈ ஸ்வரமானது சரீரத்தின் மேல் பாகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுக்கவல்ல தாயிருக்கின்றது. இது இருதயத்திற்கும் மூளைக்கும் நல்ல சக்தியை ஏற்படுத்துகின்றது. தலைநோய், சிலவிதமான இருதயநோய் முதலியவற்றிற்கு இது மிகவும் உபயோககரமாயிருக்கின்றது. சிறிதும் சுறுசுறுப்பின்றி, பித்தரோகத்துடன், அருவருப்புத் தோன்றுபவர்களுக்கு மிக்கபலனைக்கொடுக்கும்.