பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவர்களைப் பரிகாசஞ் செய்யத் தொடங்கினர். சென்ற இரண்டு மூன்று தலை முறைகளாகத் தேகப்பயிற்சிக்கு மிக்க அகௌரவம் ஏற்பட்டிருக்கிறது. அன்றியும், இப்பொழுதும் கூட இந்த பாவனையானது மாறியிருக்கிறதென்று உறுதியாய்க் கூற முடியாது. இக்காலத்துப் பிள்ளைகளுக்கென்னமோ (விளை) ஆட்டங்களில் அதிகமான விருப்பம் உண்டாயிருக்கிறது என்பதைப் பெரிய நகரங்களிலெல்லாம் தேகப்பயிற்சி சாலைகள், சாரணச் சிறுவர் இயக்கம் (Boy Scouts Movement) இவை முதலியவை ஸ்தாபிக்கப்பட் டிருப்பதனால் அறியலாம். ஆனால் இவைகள் எவ்வளவுவரைக்கும் தேகாரோக்கியம், வல்லமை, தீர்க்காயுள் முதலியவைகளை அடைவதற்குரிய உண்மையான விருப்பத்தை வளரச் செய்திருக்கின்றன என்பதைச் சற்று கவனிக்கவேண்டும். அன்னியருடைய ஆதீனத்தில் இருக்கும், (i.e.) (பிறரால் வெல்லப்பட்ட) சனங்கள் சிறிது சிறிதாகத் தங்களுடைய ஆத்ம விசுவாசத்தைவிட்டு, பிறகு தங்களை ஆளும்படியான ஜனங்களின் வெளி இடம்பங்களையும், துர்வித்தைகளையும் சிறிதும் யோசிக்காமல் கற்றுக் கொள்ளுவார்களே யொழிய, அவர்களுடைய நற்குணங்களாகிய தேசாபிமானம், ஒற்றுமை முதலானவைகளைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். இக்கெட்ட காலத்தில் ஆத்மகௌரவத்தைத் தொலைத்துள்ள சனங்கள் தங்களுடைய முன்னோர்களின் கொள்கைகளைத் தூஷிப்பதிலேயே திருப்தியடைகிறார்கள். நம்ம பூர்வீக நாகரிகமானது நல்லதாகவும், சரியானதாகவும் இருந்திருந்தால் நாம் இந்த க்ஷீண தசைக்கு வந்திருக்கமாட்டோம் என்று அநேகர் வீண்வாதம் செய்கிறார்கள். காசி சர்வகலாசாலை வரவழைப்புக் கூட்டமொன்றில் மிக்க கீர்த்திபெற்றுள்ள கல்விமானாகிய பரோடா மஹாராஜாவாகிய சப்யாஜிராவ் கெயிக்வாட் (Maharaja Sayaji Rao Gaikwad of Baroda) என்பவருங்கூட நம்முடைய பிராசீன நாகரிகத்தைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறாரெனில் சாமானிய ஜனங்கள் பழிப்பது ஒரு சிறிதும் வியப்படையத்தக்க தன்று. அன்றியும் நம்முடைய நடை, உடை பாவனைகளையும், மதாசாரங்களையுங்கூட மேல்நாட்டாரது நாகரிகத்திற்குச் சரியாகக்கொண்டுவர வேண்டுமென்றுங் கருதுகிறார்கள். சாமானிய ஜனங்களுக்கு நம்முடைய வேதபுராணங்களிலும், சாஸ்திரங்களிலும் என்ன கூறப்பட்டிருக்கின்றன என்பது சிறிதும் தெரியாது. ஆகையால் அவைகளின் நிஜதத்வங்களையும், சித்தாந்தங்களையும் அறிந்து கொண்டு அவற்றின் வழி நடக்கத்திறனற்றவர்களாகி இருக்கின்றனர். அஞ்ஞானத்துடன் தகுதியற்ற