பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியிருப்பது என்ன வெனில்: - "எந்த மனிதன் தன் னுடைய ஆகாரத்தையும், தேகப்பயிற்சியையும், தன்னுடைய காரியத்தையும் ஓய்வையும், தூக்க காலத்தையும் விழிப்புக்காலத்தையும், கிரமப்படுத்திக் கொண்டிருக்கிறானோ அத்தகையவன் பரமபதத்தை அடைவதற்குத் தகுந்தவனாகிறான். அத்தியாயம். 13. ஆரோக்கிய பாக்கியத்தின் விலை மதிப்பு. வேலைக்காரர்கள் அனாரோக்கிய தசையினால் வாணிகம், உழைப்பு இவைகளில் வருஷம் ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய்கள் நஷ்டமடைகிறார்கள் என்பதைக் கணக்குப் போடுவதே கஷ்டமாயிருக்கிறது. இந்த அபாரமான நஷ்டமல்லாமல் அவ்வக்குடும்பங்களும் கூட மிக்க துன்பத்திற் கீடாகிக் கஷ்டப்படுகின்றன. ஆகையால் ஜனங்களின் தேக வல்லமையையும் சம்பாதிக்குஞ் சக்தியையும் அதிகப்படுத்துவதற்காக சாஸ்திரீகமாயும் கிரமமாயும் உள்ள தேகப் பயிற்சியைக் கற்றுக்கொடுப்பது யுக்தமாயிருக்கிறது. அத்தகைய பயிற்சி எல்லாருக்கும் சம்மதமுள்ள தாயும் அனுகூலமான தாயும் இருக்கவேண்டிய தாயிருந்தால், அதன்கண் அடியிற்கண்ட இலட்சணங்கள் இருக்க வேண்டும்:--

   (1) கிழவராகிலும் சிறியராகிலும் அல்லது ஸ்திரீகளாகிலும் புருஷராகிலும் 

செய்யும்படிக் கிருக்கவேண்டும். (2) ஒருவராகிலும் அல்லது பலர் சேர்ந்தாகிலும் செய்யும்படி யிருக்கவேண்டும். (3) மைதானங்களிலாயினும், வீடுகளிலாயினும் செய்வதற்கு அனுகூலமாகும்படி

    யிருக்கவேண்டும். 

(4) பகலிலாகிலும் இரவிலாகிலுஞ் செய்யத்தக்க தாயிருக்க வேண்டும். (5) வருஷத்தின் எக்காலத்திலும் அனுகூலமாகும்படி யிருக்க வேண்டும். (6) இதர துணைக்கருவிகளின் உதவியின்றிச் செய்யவேண்டிய

                தாயிருக்கவேண்டும்.