பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

செயலும் செயல் திறனும்



அன்றோ? எண்ணெய் இடாமல் ஒட்டினால் உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று முன்கூட்டியே உணர்தலே இதனால் இது என்னும் உணர்வாகும்.

3. இதற்காக இது : இந்த விளைவை உண்டாக்க வேண்டுமானால் இதைச் செய்தல் வேண்டும் என்று முன்கூட்டியே எச்சரிக்கையாக அறிந்து செய்தல் வேண்டும் என்னும் மூன்றாம்படி உணர்வு நிலை இது.

எடுத்துக்காட்டாக, இயந்திரங்களில் உள்ள முகாமையான உறுப்புகளை நிலையாகப் பொருத்துவதற்கு முன், அவை விரைந்து தேய்மானமுறுவதைத் தடுப்பதற்கும், பூட்டியதைப் பிறகு எளிமையாக சுழற்றுவதற்குமாக, பொருந்து வாய்களில் மசகுநெய் (Grease) போடுவார்கள். இன்ன விளைவுக்காக அல்லது விளைவைத் தடுப்பதற்காக இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணும் உணர்வே, இதற்காக இது எண்ணும் உணர்வாகும்.

மிதிவண்டி, உந்துவண்டிச் சக்கரங்களிளால் அடிக்கும் சேற்றைத் தடுப்பதற்காகச் சக்கரங்களின் மேல் மட்காப்பு (Mudguard) போடுவதும், மிதிவண்டித் தொடரி(Chain)யின் மேல், உடைகளும், அழுக்கும், துரசும் படாமல் காப்பதற்காக அதன்மேல் தொடரிக்காப்பு (Chain guard) போடுவதும் இந்த எச்சரிக்கை உணர்வின் அடிப்படையால்தாம் என்று எனணுக.

4. இது போனால் இது: ஒரு செயலுக்குப் பொருத்தமான முறையை நாம் தேர்ந்தெடுத்து, அதற்குரிய முறையில் கருவிகளை நாம் வாங்கியிருப்போம். ஆனால், அவற்றில் ஒரு கருவி மட்டும் பொருத்தமாகக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அத்ற்கிணையாக எந்தக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று உணர்ந்துள்ள நான்காம் படிநிலை எச்சரிக்கை உணர்வாகும் இது.

கடலில், பாய்மரக் கப்பலில் போகும்பொழுது பாய்மரம் விழுந்து பாய் பழுதுற்றால் அல்லது கிழிந்து சேதமுற்றால், உடனடிப் பயன்படுத்தத்திற்குரிய வகையில் பெரிய துடுப்புகளைப் பயன்படுத்தி நிலைமையை எதிர்கொள்ளும் உணர்வு இது.

விளையாட்டில் ஈடுபடத் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஆட்டக்காரர் ஒருவர், ஆட்டத்துக்கிடையில் அடிப்பட்டு மேலும் ஆட இயலாத நிலையினை அடைந்தால், அவருக்கு மாற்றாக ஆட மாற்றாள் (substitute) வைத்திருப்பதும், பேருந்து வண்டி பழுதுறுமானால், மாற்று வண்டி (SpareBus) வைத்திருப்பதும் இந்த உணர்வின் அடிப்படையிலேயே