பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

செயலும் செயல் திறனும்வேறுவேறான பல்லாயிரங்கோடி உயிருள்ள உடல்கள் சான்ற இவ்வுலகத்தை இவ்வுலகம் போலும் பல்லாயிரங்கோடி உலகங்களை உள்ளடக்கிய இப்புடவியைக் கட்டமைக்க - இயக்க - எத்தனை ஆயிரம் அறிவுத் திறன்களும் செயலறிவுகளும், அவற்றுடன் எத்தனை எத்தனை இயற்கையியல், உயிரியல் இயக்கத்திறன்களும் தேவை? அவை அனைத்தையும் பெற்றிருப்பவர் யாரோ? அல்லது எதுவோ? அஃது எங்கோ? இவ்வினாக்கள் அனைத்திற்கும் வெறும் இயற்கை என்னும் ஒரு சொல்லில் விடை கூறிவிட்டு அடங்கி விடுமாறு, நம் அறிவுணர்வு நிறைவடைவதில்லையன்றோ?

ஒரு செயல் என்றால் என்ன? அஃது எண்ணத்தில் தோன்றிக் கருத்தில் கருக்கொண்டு, நுண் பொருளாய் உருக்கொண்டு, உணர்வு வடிவமாகி நின்று, அந்த வடிவம் பருப்பொருளாய்ச் செயலுக்கு வருவதற்குள் நேரும் இயற்கை இடையூறுகள் எத்தனை? தடைகள் எவ்வளவு? அம்மவோ, நினைக்கவும் அறிவு நிலைக்குத்திப் போகின்றதே!

இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால்,

சொல்லுதல் யார்க்கும் எளிது; அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

(664)

என்னும் மெய்க்கூற்றில்தான் எத்துணை உண்மை விளங்குன்றது. மேலோட்டமாய் ஒரு வகைப் பொருளைத் தரும் இவ்வரிய திருக்குறளடிகள் ஆழமாய்ப் பார்ப்பவர்க்கு எத்துணை விரிந்த வியத்தகு பொருளைத் தருகின்றது.

பொதுவாகவே பிரெஞ்சு நாட்டு மக்கள் வேறெந்த நாட்டினரையும் விடக் கலையுணர்வு மிக்கவர்கள், என்பதை அந்நாட்டில் சந்து சதுக்கங்களிளும், மூலை முடுக்குகளிலும், புல்வெளிகளிலும் பூங்காக்களிலும், நீர் நிலைகளிலும், வாவிகளிலும், கட்டட முகப்புகளிலும் கலையொழுகும் கட்டட உட்புற மேல் வளைவுகளிலும், சிறியனவாகவும் பெரியனவாகவும் மலிந்து கிடக்கும் செதுக்குச் சிற்பங்களையும் வண்ண ஒவியங்களையும் பார்த்தாலே கண்டு கொள்ளலாம்.

எனவேதான் அமெரிக்கப் பெட்லோ தீவில் உள்ள உரிமைப் பெண்மணியின் சிலை செய்யும் பொறுப்பைப் பிரடரிக் அகஸ்டெபர்தோல்டி என்னும் பிரெஞ்சு நாட்டுச் சிற்பி மனமுவந்து ஏற்றுக் கொண்டார். முதலில் இப்படி உரிமையின் வடிவமாக ஒரு சிலை செய்ய வேண்டும் என்னும் கருத்தினை வெளிப்படுத்தியவர் அமெரிக்க நாட்டின் பெரும் புகழ் வரலாற்றிஞரும் சட்ட வல்லுநருமான எட்வர்ட் டி லாபோலே என்பவரே யாவர். 1865 இல்