பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

செயலும் செயல் திறனும்



கூடாக நின்று, அதை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது இரும்புச் சட்டம். நாளடைவில், கடலினது உப்புக்காற்றினாலும், தட்பவெப்ப மாறுதல்களினாலும் இரும்புச் சட்டத்தில் துரு ஏறி அரிப்பு ஏற்பட்டு விட்டது. சிலைக்கே மூலமாகவுள்ள செம்புத் தோலும், அதை வடிவப்படுத்தித் தாங்கிக் கொண்டிருக்கும் இருப்புச் சட்டமும், உடனடியாகப் பழுது பார்க்காமற் போனால், போகப் போகச் சிலை மிகுந்த கேடுகளுக்கு ஆளாகும் என்று அஞ்சப்பட்டது.

செம்பும், இரும்பும் தனித்தனியே இருந்த நிலையில் இத்தகைய இயற்கைத் தாக்கங்களுக்கு ஆளானதுடன் இரண்டும் இணைந்திருந்த சில இடங்கள் மின்வேதியல் (Electrolysis) மாற்றங்களாலும் காற்று, மழை, வெப்பம் ஆகியவற்றின் தாக்கங்களாலும் மிகவும் சேதமுற்றுப் போயின சிலையின் கைநுனியில் கலங்கரை விளக்கம் வைக்கப்பெற்றிருந்தது. அதிலுள்ள சுடருக்காக வைக்கப்பெற்றிருந்த கண்ணாடித்துண்டுகளைக் கோத்து வைத்துள்ள செப்புத் தகடுகளில் தாம் அம்மின்வேதியல் தாக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தன.

சிலையின் சுடர் தாங்கும் கையும் மிகவும் பழுதடைந்திருந்தது. வல்லுநர்கள், அதன் சேதம் எத்தகையது என்று ஆய்ந்து அறிந்த பின்னர், சேதம் அதிகமாக இருந்தால் இப்பொழுதுள்ள கையை அகற்றிவிட்டுப் புதிய கையும் சட்டமும் பொருத்த வேண்டியிருக்கும்.

சுடர்பற்றி இப்போது உறுதியாகச் சொல்வதற்கில்லை. உள்ளே இருக்கும் இரும்பு அமைப்பும் தீக்கொழுந்தும், அழகு நகை வேலைகளும் பழுது பார்க்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. சுடர் அகற்றப்பட வேண்டுமா என்பது முடிவாகவில்லை. புதிய சுடர் நீர்புகாத வண்ணம் அமைக்கப்படும். செம்பில் அமைத்துத் தங்கப்பூச்சு பூசலாம் என்பது அண்மைத் திட்டமாகும். மக்கள் சுடரைப் பார்க்க மேடை (பால்கனி ஒன்று இருந்தது. அது 1916 இல் மூடப்பட்டது. நியூசெர்சியில் இருந்த வெடிமருந்து ஆலை வெடித்தபோது சிலையின் கையிலிருந்து 100 திருகாணிகள் வெளியேறின.

பழுதுபார்ப்புட்டபணிகளால் உரிமைச் செல்வியின் வெளிப்புறத் தோற்றத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. இன்று எப்படி பெருமிதமாகவும் பேரெழிலோடும் காட்சியளிக்கின்றாளோ, அப்படியே இருந்து வருவாள் என்று உறுதி-கூறுகிறார். தேசியப் பூங்காப் பராமரிப்புக் குழுமத்தின் இயக்குநர் ரசல் இ. டிக்கெர்சன்.

சிலைக்குள்ளே சாயம் அகற்றும் பணியுடன் வேலை தொடங்கும்.