பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

95என்றார் பேராசான். இது பருவ மழையை எதிர்பார்த்து விதைத்த ஒருவன், அது தப்பியவிடத்து, கிணற்றடி நீருக்கும் முயற்சி செய்வது போன்றதாகும். ஊழ் என்பது மூவகைச் செயற்பாட்டு எதிர் விளைவைக் குறிக்கும் ஒரு பொருள் பொதி சொல்லாகும் ஊழ் வேறு விதி வேறு. தேவையான விடத்து, இது மிக விரிவாக விளக்கப்பெறும் இக்கால், காலங் கருதுதல் என்பது இயற்கை வழியமைந்த ஒர் இயைபு நிலையை உணர்தலும் ஆகும் என்னும் அளவிற்கே இக்கருத்தைக் கவனித்தல் தகும். ஆனால், இயற்கை இயைபுக்குக் காத்திருந்து, மாந்தன் தன் முயற்சியால் அமைத்துக் கொள்ளும் காலத்தைக் கருதாமல் இருந்து விடுதல் கூடாது என்று உணர்ந்து கொள்க.