பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

151


நூல் : மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் - 160
நூலாசிரியர் : வித்துவான் பாலூர், து. கண்ணப்ப முதலியர்
(தமிழ் ஆசிரியர். முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)
இன்தமிழ்

தமிழ்மொழி இனிமையானது என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். அதன் இனிமையை அறிந்தவர்கள் அதனை இன்தமிழ் என்று சொல்லக் கேட்கிறோம்.

நூல் : சங்கநூற் கட்டுரைகள் (1946), பக்கம் : 1
நூலாசிரியர் : தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்)
(மறைமலையடிகள் மாணவர்)
அபிவியக்தமாக - வெளிப்படையாக
தானம் - இடுதல்
விநயம் - அடக்கம்
இலக்ஷணம் - குறி
இலக்ஷியம் - முறிக்கப்படுவது
விவகாரம் - உலக வழக்கு
நூல் : விவேக சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் (1940)
(இரண்டாம் பதிப்பு)
விளக்கம் : தஞ்சை மாநகரம் வி. பிரம்மாநந்த சுவாமிகள்
ஜலசந்தி - நீரிணை

கொத்தரில் ஒருபாலார் பாஸ்பரஸ் நீரிணை வழியால் நுழைந்து கிரேக்க நாட்டிற் புகுந்து ஏதென்ஸ் நகரைத் தாக்கினர். அவர்கள் நகரத்து நூல் நிலையத்திற்குத் தீயிடவெண்ணினராக, கொத்தர் தலைவன் கற்றிலனாயினும், நூல்களை எரிக்கப்படாதெனத் தடுத்தான்.

இதழ் : செந்தமிழ் - ஜூன், ஜூலை 1940, தொகுதி : 37
கட்டுரை : யவனர் வரலாறு - பக்கங்கள் -368, 369
கட்டுரையாளர் : த. இராமநாதபிள்ளை, பி.ஏ., (lond)