பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

உவமைக்கவிஞர் சுரதா


விலாசம் - விளிநிலை

எழுதுபவர் விளிநிலை (விலாசம்) கடிதத்தின் தலைப்பில் இடது புறத்தில் அமைதல் வேண்டும். முழு விளி நிலையையும் எழுதினால்தான் எழுதியவர் இன்னாரென்று எளிதில் அறிதற்கும், பதிலைக் கடிதம் எழுதியவர்க்கே தடையின்றிச் சேரச் செய்வதற்கும் இயலும்.

நூல் : தமிழ்க் கற்பிக்கும் முறை (1940), பக்கம் - 42
நூலாசிரியர் : சி. இலக்குவனார்
(தமிழாசிரியர், கழக உயர்தரக் கல்விக்கூடம், நன்னிலம்)
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு

தமிழ்நாட்டில் வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோண (அரண் குன்ற)த்திற்கு அடுத்த மோசூர் என்னும் ஊரிலுள்ள தமிழராகிய அன்பர்கள், கருங்கல்லால் புதியதாக ஒரு கோயில் கட்டி முடித்துப் பிள்ளையார் படிவத்தினை அதில் அமைத்து வெகுதானிய ஆண்டு வைகாசித் திங்கள் 27ஆம் (1938 ஜூன் 9ஆம் நாளாகிய வியாழக்கிழமை குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடாத்தி வைததனா.

நூல் : மோசூர் ஆலடிப் பிள்ளையர் புகழ்ப் பத்து, பக்கம் : 1
மூலமும் உரையும் (1940)
நூலாசிரியர் : மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர்.,
(பச்சையப்பன் கல்லூரி)
Conversation - சொல்லாடல்

சொல்லாடல் (Conversation)முறையில் கட்டுரைகளை எழுதச் செய்யின், ஒரு பொருளைப் பற்றித் தாமே வினவி அதன் முழு வரலாற்றையும் அறியும் திறன் பெறுவதோடு ஆராய்ச்சியறிவும் நாடகம் எழுதும் வன்மையும் பெற்றவர்களாவார்கள்.

நூல் : தமிழ்க் கற்பிக்கும் முறை (1940), பக்கம் : 41
நூலாசிரியர் : வித்துவான் சி. இலக்குவனார்
(தமிழாசிரியர், கழக உயர்தரக் கல்விக்கூடம், நன்னிலம்)