பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

155


நூலாசிரியர் : வி. ரா. இராமச்சந்திர தீக்ஷிதர், எம்.ஏ.
(வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகம்)
புத்தனேரி ரா. சுப்பிரமணியன் - முருகு
திருமணம்
ஆசிரியப்பா

மணத்தலென் சொல்லே கூடுதற் பொருளிலும்,
நறுமணங் கமழ்தல் நற்பொருள் தனிலும்,
மங்கல மொழியாய் வருவது காண்க.

இதழ் : திருமண அழைப்பிதழ் (1942), பக்கம் 1
ஆக்கியோன் : புத்தனேரி ரா. சுப்பிரமணியன்
தமிழ் நற் பெருந் தொண்டன்
(மணநாள் தொடர்பாய் மணமகன் முருகு ஆக்கியது)
Lord - பெருந்தரத்தார்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஒர் ஆங்கிலப் புலமையாளர் சீன நாட்டிற் சென்று அம்மாநாட்டு மக்களுடன் கூட்டுறவுற்று அவர் மொழிக்கண் சிறந்து விளங்கிய ஒர் அரும்பெரும் பொருணூலைத் தம்மொழியிற் பெயர்த்தமைத்துப் போற்றிய வரலாற்றை அவர் எழுத்தானே, ஈண்டு எடுத்துக்காட்டித் தமிழகத்தார் யாவரும் அறிந்து அப்பெரும் பொருணூற் பொருள்கள் நம் தமிழ் மொழிக் கண்ணும் பொதிந்து நிலையுறுதல் நன்றும் போற்றற் பாலதாமெனக் காட்டுதற்கு இக்கட்டுரையை வரைகின்றேன். அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்களாக. அவ்வாங்கில வறிஞர் தம் பெயர் விரும்பாது தந்நாட்டகத்துக் கலை நலஞ் சாலச் சிறந்தோங்க உழைத்த பெருந்தரத்தார் (Lord) ஒருவர்க்கு எழுதிவிடுத்த முடங்கல் ஒன்று ஏறத்தாழ இருநூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது.

நூல் : கோபாலகிருஷ்ண மாச்சாரியார்
அறுபதாண்டு நிறைவு விழா மாலை (1942)
கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்ப பிள்ளை, பக்கம் : 381