பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

159


அந்த நாக்குச் சரியாகக் கூழாங்கற்களை வாயில் அடக்கியபடி 6 மாதம் பயிற்சி பெற்றார். தினமும் பேசிப் பேசிப் பழகுவார். அந்த நாத் தடு மாற்றம் மாறியது. சிறந்த பேச்சாளர் ஆனார்.

நாராயணசாமி என்ற பெயரை முதலில் திருமால் அடிகள் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அப்படி மூன்று மாதங்கள் இருந்தார். இது என்ன திருமாலுக்கு அடிகள் என்று கேட்டேன். பிறகு அவர் பட்டுக்கோட்டை போய்விட்டுத் திரும்பும்போது நெடுஞ்செழியன் என்ற பெயரோடு வந்தார்.

இதழ் : நவமணி, 13.7.1970
முருகு. சுப்பிரமணியன்

ஆசிரியர் முருகுவின் எழுத்துலகம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்று சொல்லலாம்.

திருச்சி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 ஆம் ஆண்டு ஐந்தாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திரு. முருகுவின் கட்டுரை ஒன்றைத் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வகுப்பில் படித்துக் காட்டி கட்டுரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்.

1942ல் படிப்பு, முதல் பல்கலைக்கழக வகுப்போடு முடிந்தது. படிப்பு முடியுமுன்னர் திருச்சியிலேயே இளந்தமிழன் என்னும் திங்களிருமுறை ஏட்டைத் துவக்கினார்.

இளந்தமிழனில் முருகு என்னும் புனைபெயரில் எழுதி வந்ததோடு, இளந்தமிழன் ஆசிரியர் முருகு என்னும் பெயரிலேயே வந்தது. அதுவே பிறகு பெயருக்கு முன்னால் சேர்ந்து முருகு சுப்பிரமணியன் என்றாகிவிட்டது.

நூல் : தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன்
பொன்விழா மலர் (1976), பக்கம் - 36, 37
தொகுப்பு : பரிதா மணாளன்


பிரயோஜனம் - பயன்
பார்யை - மனைவி
ஜ்வரம் - காய்ச்சல்
புருஷன் - கணவன்