பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

171


வ. இராசமனோகரன் - வ. கோவழகன் (1950)

பழனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1950-51 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது கேடயம் என்னும் பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்தப்பட்டது.

'கோவழகன்' என்கிற புனைப்பெயரில், கவிதை, கட்டுரை, கதை எழுதினேன்.

வ. கோவழகன் (1950)
(வ. இராசமனோகரன்)
புலவர் மா. நடராசன், தமிழாசிரியர்
பழனிநகராட்சி உயர்நிலைப்பள்ளி, என் பெயரை மாற்றினார்.
Black Marketing - இருட்டு வாணிபம்

இருட்டு வாணிபமும், (Black-Marketing) திருட்டுக் கொள்ளையும், சுருட்டிப் பதுக்குதலும், பிரட்டுப் பித்தலாட்டமும் தமிழனுக்குப் பிடிக்காதன என்பதற்கு இப்பாடல் ஒன்றே போதியசான்றாகும்.

நூல் : தமிழ் உள்ளம் (1950), பக்கம் : 110
நூலாசிரியர் : வித்வான் ஜி. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ. பி.எல்.
(துணைப் பேராசிரியர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

ரசீது - பணப் பற்றுச் சீட்டு

இப்பணியில் ஆர்வமுள்ள அன்பர்களும், பத்திரிகைகளுக்குரியவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களிடம் கட்டணம் நன்கொடை திரட்டிப் பெயர் விவரங்களுடன் அளித்துதவினால், அவரவர்கள் கொடுக்கும் பெயர்ப்பட்டியின்படி குருகுலத்தின் பணப் பற்றுச் சீட்டு இரசீதுகள் அனுப்பப் பெறும்.

நூல் : தமிழ்ப்பணி (1950), பக்கம் : 54
நூலாசிரியர் : தமிழகத்தின் தமிழ்ப்பணிக் குழுவினர்
(உறையூர் - திருச்சிராப்பள்ளி)