பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

17


1 அண்டகோளகை — வானவட்டம்
2 இந்திர நீலரத்தினம் — கார் தந்த மணி
3 இலேபனம் — பூசுமருந்து
4 உதரம் — வயிறு
5 உச்சிட்டம் — எச்சில்
6 உபநயனச் சடங்கு — முந்நூல் வினை
7 கஸ்தூரி — மான்மதம்
8 கயிலையங்கிரி — வெள்ளிவிலங்கல்
9 காளமேகம் — கறுத்த மேகம்
10 சிவராத்திரி — அரனிரவு
11 சுபாவலட்சணம் — இயல்பு
12 திலகம் — நெற்றிப்பொட்டு
13 தெய்வலோகம் — பொன்னிலம்
14 தேகச்சுமை — உடற்பொறை
15 பச்சிமம் — மேற்றிசை
16 புளினம் — மணல்மேடு
17 மரணதினம் — உலக்குநாள்
18 மன்மதன் — ஐங்கணைக்கிழவன்
19 முத்தம் — உதடு
20 யோகநித்திரை — அறிதுயில்
21 லாபம் — ஊதியம்
22 வாமம் — இடப்பக்கம்
23 விஷம் — கடு
24 விருத்தாசலம் — முதுகுன்றம்
25 வேதவல்லி — மறைக்கொடி
26 வேதியர் — மறைவாணர்
நூல் : சிவராத்திரி புராணம் (மூலம்) (1881)

(யாழ்ப்பாணத்திலிருந்த காசி-அ. வரதராஜ பண்டிதர்)

அரும்பிரயோகவுரை : மா. நமசிவாயம்பிள்ளை.
(சிவாநந்த சாகர யோகீசுவரர் அவர்களின் மாணாக்கர் மதராஸ் ரிவினியூபோர்ட் ஆபீஸ் (லெட்டில்மெண்ட்) கிளார்க்கு

வியாபாரம் - தொழில்
நூல் : ஜீவாத்துமா விஷயமான ஒரு வியாசம் (1881)
நூலாசிரியர் : பிரம்மோபாஸி பக்கம் - 12.