பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

189


தேசாபிமானம்

தந்தையே சுவர்க்கம், தந்தையே
தருமம், தந்தையே சிறந்த தவம்;
தந்தை மனமகிழ்ந்தால் தேவர்கள் மனமகிழ்கிறார்கள்.

குழந்தையைத் தானே சுமந்து
பெற்று வளர்ப்பதால், தாயானவள் தந்தையினும் மேல்.
பிறந்த நாடும்
சுவர்க்கத்தினு மேலானவை

- மகா நிர்வான தந்த்ரம்

'இந்த நாடு என் சொந்தநாடே, என் தனையே
தந்த நாடே என்றுமகிழ் நெஞ்சில் என்றும் எண்ணிலா -
ஒருவன் தனையும் கண்டதுண்டோ கண்ணிலே?'

ஸ்காட்
இதழ் தமிழர் நேசன், தொகுதி : 11 பகுதி 2, பக்கம் :167
இந்தியத் தமிழர்கள்

திருக்குறள். இது ஆதிவேதத்திற்கு வழி நூலாகும்; இவற்றுள் செந்நாப்புலவர் யதார்த்த ஜீவிய சரிதம், அவரது கடவுள் வாழ்த்து மூலம், முதல் அறத்துப்பால் மூலம் இவைகளுக்கு க. அயோத்திதாஸ பண்டிதர், பதம், கருத்து, பொழிப்பு, அகலவுரைகளுமுண்டு. இந்தியத் தமிழர்களுக் கின்றியமையாதவனாகிய சிறந்த நூலாகும்.

நூல் : நிகழ்காலத்திரங்கல் (1925)
சித்தார்த்த புத்தக சாலையார்,
கோலார் - கோல்ட் பீல்ட்