பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

உவமைக்கவிஞர் சுரதா


தோஷம் பீடை
சகா துணை
தந்திரம் சூழ்ச்சி
உபாசனை வழிபாடு
கிரகப்பிரவேசம் குடிபுகல்
விசித்திரம் கற்பனை
நூல் : கலங்காதகண்ட விநாயகர் விண்ணப்பமாலை (1920)
நூலாசிரியர் : தேவி கோட்டை சிதம்பரச் செட்டியார்
ஈமம் சுடுகாடு
சந்தோஷம் உவப்பு
குங்குமம் செந்தூள்
கிருபை தண்ணளி
காவி வஸ்தீரம் துவராடை
மந்திரி தேர்ச்சித் துணைவன்
இமயமலை பனிவரை
இயந்திரம் பொறி
விவாகச்சடங்கு மணவினை
மந்திரம் மறையுரை
வேத்தியல் அரசியல்
யாகம் வேள்வி
நூல் : சித்தார்தன் (1918)
நூலாசிரியர் : அ. மாதவையர்
வித்தியாரம்பம் செய்தல் - பள்ளிக்கூடத்தில் வைத்தல்

கிராமத்தில் தம் குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் விஜயதசமியன்று அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவது வழக்கம். வித்தியாரம்பம் செய்தல் என்பதற்குப் பள்ளிக்கூடத்தில் வைத்தல் என்று சொல்வது வழக்கம்.

இதழ் : நல்லாசிரியன். செப்டம்பர், 1919 வயது- 15, மாதம் - 4, பக், 98
ஆசிரியர் : கா. நமச்சிவாய முதலியார் (1919)