பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

63


EVOLUTION THEORY - இயற்கைத் திரிபு

உலகின்கணுள்ள தோற்ற பேதங்களெல்லாம் ஒன்றின் ஒன்றாகக் காலந்தோறும் பரிணமித் தமையுமென வாதிப்பார் பரிணாம வாதிகள். இந்தப் பரிணாமவாதமே இக்காலத்திலே மேலைத் தேசங்களிலே (Evolution Theory) இயற்கைத் திரிபு என்னும் பெயர் கொண்டு பெரிது பாராட்டப்படுவது.

நூல் : பிரபஞ்ச விசாரம் (1919) 4- பரிணாம வாதம், பக்கம் - 31
நூலாசிரியர் : யாழ்ப்பாணம் - குகதாசர் - ச. சபாரத்தின முதலியார்
விபூதி வெண்பொடி
அகததுவசம் மாடக் கொடிகள்
திவசம் நாள்
குரோசம் கூப்பிடுதூரம்
சங்கிலி தொடர்
நூல் : திருக்கருவைத் தலபுராணம் (1919)
ஆசிரியர் : எட்டிசேரி ச. திருமலைவேற் பிள்ளை
உப்ரிகை மேல்வீடு
விமானம் ஏழடுக்கு வீடு
இரமியம் மகிழ்வைக் கொடுப்பது
சாரம் பொருள், உள்ளீடு
நூல் : மேகதூதக் காரிகை (1919)
நூலாசிரியர் : காளிதாச மகாகவி மொழிபெயர்த்தி யற்றியவர் : சுன்னாகவும் அ. குமாரசுவாமிப் பிள்ளை
Cholera – வாந்திபேதி
கலராவின் காரணப் பெயர்கள் :
விஷபேதி, பெரு வாரி, கொள்ளை நோய், கசப்பு

வாந்திபேதி யென்பது அதனால் பீடிக்கப்படுகிற மனிதர் எடுக்கிற வாந்தி அவர்களுக்கு ஆகிற பேதி ஆகிய இவ்விரு காரியங்களையும் ஒருமிக்க உணர்த்த வரும் ஒருவகை வியாதிக்கு வழங்கும் பெயராகும். வாந்தி பேதி