உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

உவமைக்கவிஞர் சுரதா


ஆங்கிலத்தில் கலரா என்று கூறப்படும். வாந்தி பேதி அதன் விஷத்தன்மையால் விஷபேதி யெனவும், பிணங்குவிக்கும் பெற்றியால் பெருவாரியெனவும், கொல்லுங் கொள்கையால் கொள்ளை நோயெனவும், மனிதர் கூறவும் வெறுப்படைவதால் கசப்பெனவும் இவ்வாறு வெவ்வேறு பெயர்களால் விளம்பப்படுகிறது.

இதழ் : நல்லாசிரியன் 1919 ஜூன். வயது 15, மாதம் 1.
கட்டுரையாளர் : சி. வே. சண்முக முதலியார் உபத்தியாயர், செஷனல் ஸ்கூல், காரியதரிசி, உபாத்தியாயர் சங்கம், திருவள்ளூர்
Governer – காவலர்

விசுவநாதரின் ராஜ விசுவாசமும் வீரமும் புயவலியும் இத்தன்மையவென உணர்ந்த ராயர் மகிழ்ச்சியுற்று அவர் வேண்டும் வரங்களைக் கொடுப்பதாகச் சொன்னார். நாயக்கர் தமது பிதாவிற்கு உயர்ப்பிச்சை கொடுக்க வேண்டுமென்று தாய் உயிர்வேண்டிய பரசுராமரைப் போற் கேட்க, அவரும் மனமுவந்து ஈந்தனர். அன்றியும் விசுவநாதரைப் பாண்டி நாட்டுக்குத் தலைமுறை தத்துவமாய்க் காவலர் ஆக்கினர்.

காவலர் என்ற பதம் Governer என்ற ஆங்கில மொழியின் பெயரில் இந்நூலில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நூல் : பாண்டிய தேச நாயக்க மன்னர் வரலாறு (1919), பக். 7,
நூலாசிரியர் : நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, அமெரிக்கன் மிஷன்,

(பசுமலை உயர்தர கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)

அன்னகோசம் - தீனிப்பை

விஷபேதி ஒருவகை மோசமான நாசகால வியாதி. கலரா கண்ட இடத்தில் அநேகர் மரித்துப் போவார்கள். ஆகையால் இப் பெருவாரிக்குச் சனங்கள் பெரிதும் பயந்து இடம் பெயர்ந் தோடுவார்கள். கலராவை ஒருவகைத் தொத்து வியாதியென்றே கருதுகிறார்கள். விஷபேதி அன்னகோசத்தில் (தீனிப்பை) எவ்வகை ஆகாரத்தையும் இருக்கவொட்டாமல் அதைக் கீழுக்கும் மேலுக்குங் கிண்டிக் கிளப்பிவிடுகிறது.

இதழ் : நல்லாசிரியர், 1919 ஜூன் வயது-15 மாதம் - 1, பக்கம் - 8
கட்டுரையாளர் : சி. வே. சண்முக முதலியார் உபாத்தியாயர், செஷனல் ஸ்கூல், காரியதரிசி, உபாத்தியாயர் சங்கம், திருவள்ளூர்,