பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

உவமைக்கவிஞர் சுரதா


அதனை ஆரியப் பார்ப்பனர் பலரும் வந்து கேட்டனராயினும், எவருங் குறை சொல்லாமல் மகிழ்ந்து வியந்தனர்.

அன்புள்ள
மறைமலைமடிகள்
நூல் : மறைமலையடிகள் (1951) பக்கம் 211.
நூலாசிரியர் : புலவர் அரசு
Hammock – வலையேணி

அப்பொழுதுதான் கனகவல்லி பாட்டை முடித்தாள். மாடியின் நடுவே, இரண்டு மரத்துண்டுகளிடையே கட்டப்பட்டிருந்த வலையேணி (Hammock) ஒன்றில் அவள் படுத்திருந்தாள். கடுமையும் செம்மையும் கலந்த அவ்வலையேணியில், ஒல்லியும் உயரமுமான அப் பொன்மேனிப் பாவை நல்லாள் வெண்சிவப்புப் பட்டாடை யுடுத்துப் படுத்திருந்த காட்சி, நீல வானத்திடையே மின்னற்கொடி யொன்று நிலையாய்க் கிடப்பதுபோலிருந்தது. -

நூல் : சதானந்தர் (ஒர் அரிய தமிழ் நாவல்) (1922) அதிகாரம் -4 துறவியின் துறவு, பஷகம் -79
நூலாசிரியர் : நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை (மறைமலையடிகள் மாணவர்)
Biology – உயிர் நூல்

'போதுமான மட்டுஞ் சுறுசுறுப்பாயிருப்பவனே பிராணதாரணப் பிரயத்தனத்தில் (Struggle For Existence) ஒழிந்துவிடாது தங்கி நிற்பான்' என்று உயிர் நூல் (Biology) முறையிடுகின்றது.

நூல் : நூல் தமிழ் வியாசங்கள் (1922) பக்கம் -6
நூலாசிரியர் : வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், பி.ஏ., (சென்னைக் கிறிஸ்தவ கலாசாலை முன்னாள் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)