பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

உவமைக்கவிஞர் சுரதா


நூல் : நாகரீகப் போர் (1925)
அதிகாரம் 3 - மேற்கரங்கச் செய்திகள், பக்கம் - 22
Crescent City – பாதிமதிப் பட்டினம்

அன்று முழுதும் டாலாஸில் இருந்துவிட்டு, மறுநாள் புறப்பட்டு பாதிமதிப்பட்டினம் (Crescent city) என்னும் ந்யூ ஆர்லியாங் (New Orleans) துறைமுகத்தைப் போய்ச் சேர்ந்தார்கள். அதன் வியாபாரமும், ஏற்றுமதி இறக்குமதிகளும், ஜனாகாரமும் அளவிலாதிருந்தன. அதில் இரண்டு மூன்று தினங்கள் தாமதித்தார்கள். அதை விட்டுப் புறப்படுவதற்கு முதல் நாள் அங்குமொரு அதிசயத்தைக் கண்டார்கள்.

நூல் : நாகரீகப் போர் (1925) பக்கம் -32
Smelling Salt - முகருப்புக் குப்பி

அம்மையார் மூர்ச்சை போனதை ஸ்தயவ்ரதனும் அங்குள்ள மற்றவரும் கண்டு, அவளுக்கு மூர்ச்சை தெளிதற்குரிய சிகித்ஸைகளைச் செய்தார்கள். ஸத்யவ்ரதன் அன்று ஷோக்கில் வெளிக்கிளம்பியிருந்தானகையால், அவள் கையில் ஒர் முகருப்புக் குப்பியை வைத்திருந்தான். அதை அம்மையாரின் மூக்கில் காட்டவும், அம்மையா ரெழுந்திருந்து உட்கார்ந்தாள்.

நூல் : நாகரீகப் போர் (1925)
அதிகாரம் : 4 - மாயா மித்திரம், பக்கம் 46, 47
Secondary Education – இரண்டாங் கல்வி
University - பல்கலைக்கழகம்

நான் இரண்டாங் கல்வி கடந்து பல்கலைக் கழக முதல் வகுப்பைச் சேர்ந்த பின் எனக்கு விவாஹம் நடந்தது. வயதிலும், அழகிலும், படிப்பிலும், அந்தஸ்திலும் எனக்கு ஒப்பான ஓர் வாலிபனுக்கே நான் வாழ்க்கைப்பட்டேன்.

நூல் : நாகரீகப் போர் (ஓர் நவீனம்) (1925)
அதிகாரம் : 7 - சக்தி போதம், பக்கம் 65