பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

93


Treaty Ports - உடன்படிக்கைத் துறைமுகங்கள்

கீழ்நாட்டு உடன்படிக்கைத் துறைமுகங்களில் குறைந்தபக்ஷம் பத்து லக்ஷம் பெண்மக்கள் இவ்வீனத் தொழிலில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வூழியத்தில் இவர்கட்கு ஒருவருடம் முதல் பத்து வருடம் வரையிலுந்தான் பிழைப்பு. இச்சாகமாட்டாப் பிழைப்புக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் பெண்கள் வேண்டப்படுகிறார்கள்.

நூல் : நாகரீகப் போர் (ஓர் நவீனம்) (1925)
அதிகாரம் 10 - குஹ்ய சந்தேசம், பக்கம் - 130
Film – தகடு

நான் முன்னிருந்த விடத்திற்கு ரகசியமாகச் சென்றேன். அவ்விடத்தில் எனக்கு மிகவும் ஆபத்தான நண்பரொருவர் ஒரு விளம்பரச் சீட்டை என் கையில் கொடுத்தார். அதில் இந்தியன் சினிமாவில் 'துறவி' என்ற ஒரு காட்சி நடப்பதாகத் தெரிவித்திருந்தது. அது அவ்வூருக்குப் புதிய தகடு என்றும் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணுருப்படம் அச்சிட்டிருந்தது.

மேற்படி நூல் : அதிகாரம் 13 கூடிப் பேசல், பக்கம் - 182
Pocket Book - சட்டைப்பைப் புத்தகம்

ஸத்யவ்ரதன் அவனிடம் சில உல்லாச வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தன் அங்கியிலிருந்து சட்டைப்பைப் புத்தகத்தை (பாக்கெட் புத்தகத்தை) எடுத்து அதிலிருந்து 500 டாலருக்கு ஒரு செக்கைக் கிழித்து அவள் கையில் கொடுத்தான். அவள் முன்போலவே அதை வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக் கையில் வாங்கி உடைக்குள் வைத்துக் கொண்டாள். ஸத்யவ்ரதன் விடைபெற்று வெளியேறினான். -

மேற்படி நூல் : அதிகாரம் 15 - திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் – 201