பக்கம்:தம்ம பதம்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல் பதினைந்து

195.

196.

107.

198.

199.

200.

களிப்பு

பகை கொள்ளும் மனிதரிட்ையே பகையில்லாது நாம் இன்பமாக வாழ்கிறோம்; பகைக்கும் மனித ரிடையே நாம் பகையின்றித் திரிகிறோம். (1)

துயர்களால் வருந்துவோர் நடுவே துயரின் றி நாம்

இன்பமாக வாழ்கிறோம்; துயரப்படுவோர் நடுவே நாம் துயரின் றித் திரிகிறோம். (2) கவலையால் நலிந்தவரிடையே நாம் கவலை

யின்றி இன்பமாய் வாழ்கிறோம்; கவலைப்படு வோர் நடுவே நாம் கவலையின்றித் திரிகிறோம்.

  • (3) எமது என்று எதுவுமில்லாத நாம் இன்பமாக வாழ் கிறோம்; தேசு மிகுந்த தேவர்களைப்போல் நாம் இன்பத்தைப் பருகிக்கொண்டே வாழ்வோம். (4)

வெற்றி வெறுப்பை வளர்க்கும்; தோல்வியுற்றார் துக்கத்தில் வாழ்பவர். வெற்றியும் தோல்வியும் விரும்பாதவன் சுகமும் சாந்தியும் பெறுகிறான்.

(5) ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;

உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர்

H --- - வேறில்லை;

சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

- ா , (6)

பேராசையே பரம ரோகம்; ஐம்புல ஆசைகள் பரமரோகம்; இதை உண்மையாக உணர்ந்தவனுக்கு நிருவாணமே பரம சுகம். (7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/52&oldid=568665" இருந்து மீள்விக்கப்பட்டது