பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

திருக்குறள்



வா’ என்ற இராமன் செயலை ஊராண்மைக்குப் பரிமேலழகர் உதாரணம் காட்டுகிறார். இதைத் 'தழிஞ்சி’ என்று இலக்கணம் வல்லார் கூறுவர். 773

4.கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

தன் கையில் தாங்கியிருந்த வேலை மேல் வந்த யானையின் மீது எறிந்து கொன்று,, வருகின்ற யானைக்கு வேறு வேலை தேடி வருகின்றவன் தன் மார்பின்கண் தைத்திருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்ச்சி கொள்வான்.

களிறு - ஆண்யானை; மெய் - உடம்பு: இங்கே இச்சொல் மார்பினைக் குறிக்கும்; பறியா - பறித்து, பிடுங்கி. 774

5.விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு?

பகைவனைச் சினந்து நோக்கிய கண், அப்பகைவன் குறிபார்த்து வேலைக் கொண்டு எறிய முயலும்போது தன் இமைகளைச் சிறிது மூடித் திறந்தாலும் அஃது அஞ்சாமையையுடைய அந்த மாவீரனுக்குத் தோல்வியை யாகும்.

விழித்த கண் - சினந்து நோக்கிய கண்கள்: அழித்து இமைத்தல் - இமைகளைச் சிறிது மூடித் திறத்தல், ஒட்டு - பகைவனுக்கு அஞ்சி ஒடுதல்; வன்கணவர் - வீரத்தில் சிறந்தவர். 775

6.விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

வீரன் தன் வாழ்நாட்களை எண்ணிப் பார்த்து அந்த நாட்களுள் தன் மார்பிலும் முகத்திலும் புண்படாத நாட்களைப் பயனற்ற நாட்களாகவே வைத்து எண்ணிப் பார்ப்பான்.

விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்ட புண்கள்; வழுக்கினுள் - பயனற்ற நாட்களும். 776

7.சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.