பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

திருக்குறள்என்னாமல் 'அவ்வுயிர்’ என்று வெறுத்துக் கூறுகின்றார் திருவள்ளுவர்; போஒம்-இவ்வுலகத்தை விட்டுப் பிரியும்.

எதற்கும் பயனில்லாதவன் இறந்து போவதே நலம் என்பது கருத்து. 848

9.காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

அறிவில்லாத ஒருவனுக்கு ஒன்றை அறிவிக்க முயலுபவன் முடிவில் தான் அவனுக்கு உணர்த்த முடியாமைக்குத் தன் அறியாமையை எண்ணித் தானே வருந்த நேரும்; அந்த அறிவற்றவனோ தான் முன்பு இருந்த நிலையிலேயே இருந்து கொண்டு தான் எல்லாம் அறிந்தவன் என்று தனக்குத் தானே எண்ணிக் கொள்வான்.

கருத்து: அறிவற்றவன் தனக்கு உரைத்தவனையும் அறிவில்லாதவனாக்கித் தான் எல்லாம் அறிந்தவன் போல தன் எண்ணத்தில் விடாப்பிடியாய் இருப்பான். 849

10.உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

உலகத்தில் உள்ள பெரியோர்கள், 'உண்டு' என்று கூறும் ஒன்றை, 'இல்லை’ என்று சாதிக்கும் ஒருவன், இவ்வுலகத்தினரால் மகன் என்று கருதப்படாமல் பேய் என்றே எண்ணப்படுவான்.

வையம் -பூமி, உலகத்தில் உள்ள மக்கள்; அலகை-பேய்; 850

86. இகல்


1.இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

எல்லா உயிர்களையும் ஒன்றோடொன்று பொருந்தி யிருக்க வொட்டாமல் அவைகளை வேறுபடுத்தி வைத்தல் என்னும் தீய குணத்தினை வளர்க்கும் நோயினை இகல் என்று அறிஞர் சொல்லுவர்.