பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

திருக்குறள்


வாய்க்குத் தக்க வாழ்க்கையையும் உடையவளாய் இருத்தல் வேண்டும். அத்தகைய மனைவி இல்லற வாழ்க்கைக்கு ஒரு சிறந்த துணையாவாள். 51

2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள் ஒரு மனையாளிடத்தில் அமைந்திருத்தல் வேண்டும். இல்லையானால் அந்த இல்லற வாழ்க்கை எப்படிப்பட்ட பெருமையை உடையதானாலும் பயனற்றதாகும். 52

3.இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

நற்குண நற்செய்கைகளையுடைய மனைவியைப் பெற்ற கணவனிடத்து இல்லாத செல்வம் இல்லை. மனைவினிடத்து நற்குண நற் செய்கைகள் இல்லையானால் கணவனிடத்து எந்தச் செல்வமும் இருப்பதாகக் கொள்ள முடியாது.

இல்லது - இல்லாத பொருள்; இல்லவள்-வீட்டிற்கு உரியவள் (மனைவி); உள்ளது-இருக்கின்ற பொருள்; மாணாக்கடை-நற்குண நற்செய்கைகளால் பெருமையடையாத போது. 53

4.பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்?

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் அடைவதற்குத் துணையாய் இருப்பவள் கற்புடைய மனைவி. ஒருவன் அடையக் கூடிய பொருள்களுள் அப்படிப்பட்ட கற்புடைய மனைவியினும் உயர்வாகிய பொருள் வேறு ஒன்றும் இல்லை.

பெருந்தக்க-பெரிய தகுதியினையுடைய பொருள்கள்; யா-எவை: திண்மை-கலங்கா நிலைமை. 54

5.தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

ஒரு மனைவி கடவுளை வழிபடா விட்டாலும் எல்லாத் தெய்வமும் தன் கணவனே என்று கருதி அவனை முறை