பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றியில் செல்வம்

273



ஈட்டம்.சொத்து வைத்தல்; இவறல்-விரும்புதல்; இசை-புகழ்; நிலக்கு-நிலத்துக்கு, பூமிக்கு; பொறை-பாரம்.

'இவறி’ என்பதற்கு உலோப குணம் கொண்டு என்றும் பொருள் கொள்ளலாம். 1003

4.எச்சமென்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

பிறருக்கு ஒன்றும் உதவாதிருத்தலால், ஒருவராலும் விருப்பப்படாதவன் தான் இயந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?

எச்சம்-எஞ்சி நிற்பது; கொல்லோ-கொல், ஓ-இவை ஐயப் பொருளில் வந்தவை; நச்சுதல்-விரும்புதல். 1004

5.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

பிறருக்குக் கொடுத்து உதவுவதும், தாம் உண்டு களிப்பதும் இல்லாதாருக்கு அடுக்கடுக்காகப் பலப்பல கோடி மதிப்புள்ள செல்வம் இருப்பதாக இருந்தாலும், அவை யாவும் இல்லாததற்குச் சமமே ஆகும்.

துய்த்தல்-நுகர்தல்; அடுக்கிய கோடி-பலப்பல கோடி. 1005

6.ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

தானும் அனுபவிக்காமல், தகுதி வாய்ந்தவர்க்கு ஒன்றைக் கொடுத்துதவும் குணமும் இல்லாமல் இருப்பவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய் ஆவன்.

ஏதம்-துன்பம், இங்கே நோய் என்பது பொருள். துவ்வான்- அனுபவிக்காமல். 1006

7.அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

ஆதரவு அற்றவர்களுக்கு ஒரு சிறு பொருளேனும் கொடுத்து உதவாதவன் செல்வம் எதற்குச் சமம் என்றால்,