பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தன் பிரிவினால் வருந்தும் தலைவியின் துயரத்தை உணராது புறத்தொழுக்கம் ஒழுகும் தலைவனைத் தோழி கண்டித்துரைப்பதாக அமைந்தது,

அரிகால் மாறிய அங்கண் அகன்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவயின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தம் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே

எனவரும் நற்றினைச் செய்யுளாகும்.

'நெல்லின் அரிந்த தாளாகிய அடிப்பகுதி மறு உழவால் மாறிய அழகிய இடமகன்ற வயலிடத்தே மறுசால் உழுததினால் ஈரம் உலராத அவ்வயற் பகுதியிலே விதைத்தற் பொருட்டு விதைகளைக் கொண்டு செல்லப் பட்ட கூடைகள் பலவேறு வகைப்பட்ட மீன்களைக் கொண்டு மீளும் புதுவருவாய் நீங்காத மருதநிலத்து ஊரின் தலைவனே, பிறரை ஏவல் கொள்ளும் நிலையில் நீண்ட ஆணை மொழிகளைக் கூறுதலும், விரைந்து செல்லும் ஊர்திகளை ஊர்ந்து செலுத்துவதும் உயர்ந்த செல்வமெனக் கருதப்படமாட்டா. அவை தாம் தாம் செய்த தொழிற் பயனால் நுகரும் நுகர்ச்சியேயாகும். பண்பால் நிறைந்த சான்றோர்களால் உயர்ந்த செல்வமெனக் கூறப்படுவது, தம்மைச் சேர்ந்தோரது துன்பத்தைக் கண்டு அஞ்சும் பண்போடு கூடிய அருளுடைமையாகிய செல்வம் ஒன்றேயாகும். அதுவே எல்லாச்